நிதி அமைச்சகம்

நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து ஆலோசனை

Posted On: 04 JUN 2021 6:21PM by PIB Chennai

நடைபெறவுள்ள உள்கட்டமைப்புகள் திட்டம் குறித்து அரசு மூத்த அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பட்ஜெட் தாக்கலுக்குப்பின், மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத்துறை  அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் நடத்தும் நான்காவது ஆய்வு கூட்டம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டம் குறித்து ஆலோசிக்கும் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.

இந்த கூட்டத்தில் நிதித்துறைச் செயலாளர், பொருளாதார விவகாரத்துறை செயலாளர், பொது நிறுவனங்கள் துறை செயலாளர், மின்துறை அமைச்சக செயலாளர், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சகங்கள் மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களின் மூலதன செலவுகள் குறித்து ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர், அதிகரிக்கப்பட்ட முதலீட்டு செலவினம், தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் பொருளாதாரத்தை மீட்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். இவற்றை உடனடியாக பயன்படுத்துமாறும் மத்திய அமைச்சகங்களை அவர் ஊக்குவித்தார்.

முதலீட்டு செலவின இலக்குகளில் அதிகமாக சாதிப்பதில் கவனம் செலுத்தும்படி மத்திய அமைச்சகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. 2021-22ம் நிதியாண்டின் மூலதன திட்டங்களுக்கு ரூ.5.54 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டை விட 34.5 சதவீதம் அதிகம் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்

உள்கட்டமைப்பு செலவினம் மத்திய அரசின் பட்ஜெட் செலவினம் மட்டுமின்றி, அதில் மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் நிலுவையில் உள்ள உள்கட்டமைப்பு செலவினங்களும் அடங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சர் சுட்டிக் காட்டினார்இதில் அரசின் கூடுதல் பட்ஜெட் செலவும் அடங்கியுள்ளது.

ஆகையால், புதுமையான வழிகள் மூலம் திட்டங்களுக்கான நிதியை பெறுவதில் தீவிரமாக பணியாற்றவும், உள்கட்டமைப்பு திட்டங்களில் தனியார் துறைகளின் செலவுகளை அதிகரிக்க அனைத்து உதவிகள் அளிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் சாத்தியமான திட்டங்களை ஆராய வேண்டியதன் அவசியத்தையும் நிதித்துறை அமைச்சர் வலியுறுத்தினார்குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவில் அளிப்பதை மத்திய அமைச்சகங்களும் அதன் பொதுத்துறை நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார்.

முக்கிய திட்டங்களில் செலவினங்களை உடனடியாக மேற்கொள்ளவும், குறித்த காலத்தில் அவற்றை முடிக்கும்படியும் அமைச்சரவை செயலாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்போவதாகவும் மத்திய நிதியமைச்சர் கூறினார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724481

----



(Release ID: 1724555) Visitor Counter : 195