அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவி தயாரிப்பில் ஈடுபட கருத்தரங்கு

Posted On: 01 JUN 2021 5:05PM by PIB Chennai

ஆக்ஸிஜன் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்காக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகள் தயாரிப்பில் ஈடுபடுத்துவதற்கான கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த கருத்தரங்கை, இந்தூரில் உள்ள  குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டு மையம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள லகு உத்யோக் பாரதி, இந்திய மருத்துவ சங்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நடத்தியது.

இதில் முக்கிய உரை நிகழ்த்த துர்காபூரில் உள்ள சிஎஸ்ஐஆர்-சிஎம்ஆர்ஐ இயக்குனர் டாக்டர் ஹரிஸ் ஹிரானி அழைக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஆக்ஸிஜன் தேவை தற்போது மிகப் பெரிய அளவில் நிறைவேற்றப்படுகிறது என குறிப்பிட்ட டாக்டர் ஹிரானி, நீண்ட கால தீர்வுக்கு, பொறியல் துறைமருத்து நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்களின் கூட்டு நடவடிக்கைகள் அவசியம் என கூறினார்.   அனைவரும் இணைந்து பணியாற்றினால், ஆக்ஸிஜன் உற்பத்தியில் நாம் தற்சார்பு நிலையை அடைந்து தற்சார்பு இந்தியாவை உருவாக்கலாம் என்றார்.

சிறு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவி மிகவும் உதவியாக இருக்கும். ஆக்ஸிஜன் சிலிண்டர் விலைகளுடன் ஒப்பிடும் போது, ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவி மூலமான செலவு 50 சதவீதம் குறைவாக இருக்கும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723435

*****************



(Release ID: 1723474) Visitor Counter : 201