வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அரசின் மின்னணு சந்தை தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்காக கூடுதல் பங்கேற்பாளர்களை இணைக்குமாறு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கோரிக்கை

Posted On: 01 JUN 2021 3:34PM by PIB Chennai

அரசின் மின்னணு சந்தை தளத்தில்  பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்காகக் கூடுதல் பங்கேற்பாளர்களை இணைத்து, அத்தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று அழைப்பு விடுத்துள்ளார். அரசின் மின்னணு சந்தை தளம் மற்றும் வர்த்தகத் துறை அதிகாரிகளுடன் உரையாடிய அவர், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு நிறுத்தக் கடையாக மட்டுமல்லாமல், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். காகிதமற்ற, ரொக்கமில்லா, கணிப்பொறியில் இயங்கும் மின்னணு சந்தை தளம் குறைந்த மனித சக்திகளை பயன்படுத்தி, பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதாகக் கூறிப் பாராட்டிய அமைச்சர், இந்தத் தளத்தின் மீது பிரதமர் மிகுந்த நம்பிக்கைக் கொண்டு இருப்பதாகவும், அதை ஈடு செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விற்பனையாளர்களின் கூட்டு முயற்சிக்கு எதிராக இந்த தளம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஒருங்கிணைந்த கொள்முதல் அமைப்புமுறையை நோக்கி ரயில்வே மின்ணு கொள்முதல்  அமைப்பை அரசின் மின்னணு சந்தை தளத்தை இணைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திரு கோயல் வலியுறுத்தினார். இதன் மூலம் பொது நிதி சேமிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். பெட்ரோலியம் மற்றும் எஃகு துறைகள் பெருமளவு கொள்முதலை மேற்கொள்ளவும் இந்த முயற்சி ஏதுவாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த அமைப்பு முறையில் ரயில்வே துறையில் வாங்குபவர்களின் ஏலம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்பிற்குப் பிறகு மின்னணு சந்தை வாயிலாக சுமார் ரூ. 50,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ரயில்வே துறையால் ஆண்டுக்கு மேற்கொள்ளப்படக்கூடும்‌.

அரசின் மின்னணு சந்தை தளத்தினால் எண்ணிக்கை மற்றும் தாக்கத்தில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் மதிப்பு நிதியாண்டு 2020-21 ரூ. 38620 கோடியை எட்டியது. சுமார் 52 ஆயிரம் நுகர்வோரும் சுமார் 18.75 லட்சம் விற்பனையாளர்களும் பதிவு செய்துள்ள இந்தத் தளத்தில், 16332 பொருட்களும் 187 சேவைகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723398

*****************



(Release ID: 1723472) Visitor Counter : 198