சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தடுப்பு மருந்து வழங்கல் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு

Posted On: 31 MAY 2021 6:27PM by PIB Chennai

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்து  வழிகாட்டி, கண்காணித்து வரும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அதன் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டத்தை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இன்று நடத்தியது,.

மத்திய சுகாதர செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் தலைமை வகித்த இக்கூட்டத்தில், தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை நாடு முழுவதும் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதோடு, 2021 ஜூன் மாதத்தில் அதிகளவிலான தடுப்பூசிகள் வழங்கப்படவிருப்பதாக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பு மருந்து வழங்கலின் வேகத்தை அதிகரித்திருப்பதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை பாராட்டிய மத்திய சுகாதார செயலாளர், இது இன்னும் மேம்படுத்தப்படலாம் என்று கூறினார்.

சுமார் 12 கோடி (11,95,70,000) டோஸ்கள் அடுத்த மாதம் விநியோகிக்கப்பட இருப்பதால், தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கையை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அதிகரிக்க முடியும்.

தடுப்பு மருந்து வீணாதலை பெருமளவு குறைக்குமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

                                                                                   -----
 


(Release ID: 1723264)