ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
ரொம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி 10 மடங்கு உயர்வு: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
प्रविष्टि तिथि:
29 MAY 2021 12:44PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி நாட்டில் பெரும் மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி நாள் ஒன்றுக்கு 33000 குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அதைவிட பத்து மடங்கு கூடுதலாக, இன்று நாளொன்றிற்கு 3,50,000 குப்பிகள் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ரெம்டெசிவிர் மருந்தைத் தயாரிக்கும் ஆலைகளின் எண்ணிக்கையையும் ஒரே மாதத்தில் 20லிருந்து 60-ஆக அரசு உயர்த்தியிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார். தேவைக்கும் அதிகமான மருந்துகள் தற்போது விநியோகம் செய்யப்படுவதால், ரெம்டெசிவிர் மருந்து, நாட்டில் போதிய அளவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களுக்கான ரெம்டெசிவர் மருந்தின் மத்திய ஒதுக்கீட்டை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாக திரு மாண்டவியா கூறினார். நாட்டில் ரெம்டெசிவர் மருந்தின் இருப்பைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு தேசிய மருந்து விலை நிர்ணய முகமை மற்றும் மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அவசரத் தேவைகளை எதிர்கொள்ளும் உத்தியாக 50 லட்சம் குப்பிகளை கொள்முதல் செய்யவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722633
-----
(रिलीज़ आईडी: 1722687)
आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam