சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுக்கு அருகே கொவிட் தடுப்பூசி மையங்கள் (NHCVC) அமைப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மாநிலங்களுடன் பகிர்ந்தது மத்திய அரசு

Posted On: 27 MAY 2021 4:47PM by PIB Chennai

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வீட்டுக்கு அருகிலேயே தடுப்பூசி மையங்கள் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பகிர்ந்து கொண்டுள்ளது.

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு அருகே தடுப்பூசி மையங்களை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு (NEGVAC) பரிந்துரைத்துள்ளது.  

உடல் நிலை காரணமாக அதிகம் நடமாட முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய மத்திய அமைச்சகத்தின் தொழில்நுட்ப குழு இந்த பரிந்துரையை சமர்பித்தது.

இந்த பரிந்துரைகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

வீட்டுக்கு அருகே கொவிட் தடுப்பூசி மையங்களை அமைப்பதில் சமுதாய அடிப்படையிலான, நெகிழ்வான மக்கள் மைய அணுகுமுறையை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்புசி மையம்  பின்பற்றும்.

கீழ்கண்ட தகுதியுடைவர்களுக்கு மட்டுமே வீட்டுக்கு அருகே கொவிட் தடுப்பூசி  மையம் ஏற்பாடு செய்யப்படும். மற்ற வயதினருக்கு, தற்போதுள்ள கொவிட் தடுப்பூசி மையங்களிலேயே தடுப்பூசி போடப்படும்.

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கு அருகே அமைக்கப்படும் கொவிட் தடுப்பூசி மையங்களுக்கு தகுதியானவர்கள்: 

1. தடுப்பூசி போடாமல் இருக்கும் அல்லது முதல் டோஸ் போட்ட 60 வயதுக்கு  மேற்பட்டவர்கள்.

2.  உடல் நிலை அல்லது மருத்துவ காரணங்கள் காரணமாக மாற்றுத்திறனாளியாக உள்ள 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722164

*****************


(Release ID: 1722226) Visitor Counter : 310