பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான தொலைதூர மருத்துவ சேவை இணையதளம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கம்
Posted On:
27 MAY 2021 2:43PM by PIB Chennai
ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொலைதூர மருத்துவ ஆலோசனை வசதிகளை அளிக்கும் இணையதளத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மின்னணு-சுகாதார உதவி மற்றும் தொலைதூர ஆலோசனை வழங்க
https://sehatopd.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த இணையதளத்திற்கான பரிசோதனை 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தொடங்கியது. இதன் மூலம் ஏற்கனவே, 6,500 மருத்துவ ஆலோசனைகள் ராணுவ டாக்டர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், இந்த இணையதளத்தை உருவாக்க உதவிய ராணுவத்தின் பல பிரிவினரை பாராட்டினார். டிஜிட்டல் இந்தியா என்ற அரசின் உறுதியை பிரதிபலிப்பதாக இந்த இணையதளம் உள்ளது என அவர் கூறினார். நாட்டு மக்களுக்கு சிறந்த வெளிப்படையான வசதிகளை வழங்கவேண்டும் என்பதே அரசின் முயற்சியாக உள்ளது என அவர் கூறினார். இந்த வெளி நோயாளிகள் பிரிவுக்கான இணையதளம், கொவிட் தொற்று நேரத்தில், புத்தாக்கத்தின் சிறந்த உதாரணமாக உள்ளது என்றும், இது மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டத்தை குறைத்து, நேரடி தொடர்பில்லா ஆலோசனைகளை எளிதாகவும், திறம்பட பெறவும் உதவும் என திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
கொவிட் 2ம் அலைக்கான போராட்டத்தில், டிஆர்டிஓ மற்றும் ராணுவப்படைகளின் பங்கை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். கொவிட்டுக்கு எதிரான போரில் வெற்றி பெறும்வரை, இந்த முயற்சிகளை கைவிட வேண்டாம் என ராணுவத்தினரை அவர் வலியுறுத்தினார்.
இந்த காணொலி நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722115
*****************
(Release ID: 1722150)
Visitor Counter : 334