எரிசக்தி அமைச்சகம்

கொரோனா பரவலில் இருந்து பெருவாரியான மக்களைப் பாதுகாக்க, தேசிய அனல் மின் கழகம் ஆதரவு

Posted On: 27 MAY 2021 12:05PM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மிகப்பெரும் எரிசக்தி நிறுவனமான தேசிய அனல்மின் கழகம், கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையின் போது நாட்டில் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை மட்டும் உறுதி செய்யாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

போர்கால அடிப்படையில் பணியாற்றி, ஒரு வார காலத்திற்குள் இந்த நிறுவனம் 600க்கும் மேற்பட்ட பிராணவாயு படுக்கைகளையும் 1200 தனிமை படுக்கைகளையும் உருவாக்கி பொதுமக்கள் உட்பட ஏராளமானோரைக் காப்பாற்றியுள்ளது. தேசிய அனல் மின் கழகம், மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி, தொலைதூரப் பகுதிகளிலும் மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரித்துள்ளது. தில்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதிகளில் கொவிட்-19 தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தேசிய தலைநகரப் பகுதியில் பிராணவாயு வசதியுடன் கூடிய 200 படுக்கைகளையும் 140 தனிமை படுக்கைகளையும் இந்த நிறுவனம் உருவாக்கி, கொவிட் நோயாளிகளுக்கு மிகப்பெரும் நிவாரணம் அளித்தது. இதன்படி தாத்ரி, நோய்டா, பதாரூரில் ரூ. 30 கோடி மதிப்பில் பிராணவாயு வசதி, கொவிட் பரிசோதனைகள், செயற்கை சுவாசக் கருவிகள், 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ சிகிச்சை போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.‌ இவற்றை நிர்வகிப்பதற்காக சுமார் 40 மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட துணை மருத்துவ மற்றும் உதவி பணியாளர்கள், ஏழு அவசர சிகிச்சை வாகனங்களை தேசிய அனல் மின் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக்  காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722081

*****************(Release ID: 1722118) Visitor Counter : 40