சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தடுப்பு மருந்து வழங்கல் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் ஆய்வு செய்த மத்திய அரசு, வேகத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தியது
Posted On:
25 MAY 2021 7:40PM by PIB Chennai
கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்து வழிகாட்டி, கண்காணித்து வரும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அதன் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டத்தை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இன்று நடத்தியது,.
மத்திய சுகாதர செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் தலைமை வகித்த இக்கூட்டத்தில், தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை நாடு முழுவதும் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதோடு, பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவதில் பின்தங்கி இருக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.
முன்களப் பணியாளர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பு மருந்து வழங்குவதை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தடுப்பூசி வீணாதலுக்கான தேசிய சராசரி 6.3 சதவீதமாக இருக்கும் நிலையில், ஜார்கண்டில் இது 37.3 சதவீதமாகவும், சத்தீஸ்கரில் 30.2 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 15.5 சதவீதமாகவும், ஜம்மு காஷ்மீரில் 10.8 சதவீதமாகவும், மத்தியப் பிரதேசத்தில் 10.7 சதவீதமாகவும் உள்ளது.
தடுப்பு மருந்து வழங்கலின் வேகத்தை அதிகரிக்க கோவின் தளத்தின் வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதர செயலாளர் கேட்டுக்கொண்டார்.
-----
(Release ID: 1721762)
Visitor Counter : 216