குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வாழ்த்து
Posted On:
25 MAY 2021 4:43PM by PIB Chennai
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
“பகவான் புத்தரின் பிறந்த நாளைக் குறிக்கும் ‘புத்த பூர்ணிமா’ என்னும் புனிதத் தருணத்தில், நம் நாட்டு மக்களுக்கு எனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பூமியில் அவதரித்த சிறந்த ஆன்மீக தலைவர்களுள் பகவான் புத்தரும் ஒருவர். பகவான் புத்தரின் என்றும் நிலைத்திருக்கும் கருத்துக்களான அமைதி, சகோதரத்துவம் மற்றும் கருணை ஆகியவை, நீதி நெறிகள் மற்றும் மனநிறைவு அடிப்படையிலான வாழ்வை நோக்கிச் செல்வதற்கு உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.
நமது நாட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்துக் கொண்டாடும் சிறப்பான தருணமாக பண்டிகைகள் விளங்குகின்றன. எனினும் தற்போது நிலவும் கொவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு, கொவிட் மருத்துவ மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இந்தப் பண்டிகையைக் கொண்டாடுமாறு எனது சக குடிமக்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நன்னாளில், பகவான் புத்தர் வழி காட்டிய கருணை மற்றும் சகிப்புத்தன்மையின் பாதையில் செல்ல நாம் உறுதி ஏற்போம்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721619
-----
(Release ID: 1721664)