ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.1,605 கோடி நிதி: இந்த நிதியாண்டில் 11 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும்
Posted On:
25 MAY 2021 3:16PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்களில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், 8 வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராம வீடுகளுக்கு இந்த நிதியாண்டில், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.1,605 கோடியை மத்திய அரசு வழங்கியது. இது இந்த நிதியாண்டில் வழங்கப்படும் 4 தவணை தொகைளில், முதல் தவணை.
2021-22ம் நிதியாண்டில், வடகிழக்கு மாநிலங்களுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மானியமாக ரூ.9,262 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சவாலான நேரத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த ஒதுக்கீடு, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை வழங்கி இப்பகுதியின் பொருளாதாதரத்தை அதிகரிக்கும்.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழான இந்த மத்திய நிதி ஒதுக்கீட்டில், 93 சதவீத நிதி குடிநீர் விநியோக கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும். 5 சதவீத தொகை துணை நடவடிக்கைகளுக்கும், 2 சதவீத தொகை தண்ணீரின் தரத்தை கண்காணிக்கும் நடவடிக்கைக்கு செலவிடப்படும்.
வடகிழக்கு மாநிலங்களில் 90 லட்சம் கிராம வீடுகள் உள்ளன. அதிபட்சமாக அசாமில் 63.35 லட்சம் வீடுகள் உள்ளன. 2020-21ம் ஆண்டில் இந்த மாநிலங்களில் 11 லட்சம் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன. தற்போது வரை இந்த மாநிலங்களில் 16.27 லட்சம் வீடுகளில் (18 சதவீதம்) மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்தை பிரதமர் அறிவித்த போது, இங்கு 3.2 லட்சம் வீடுகளில் (3 சதவீதம்) மட்டுமே குடீநீர் குழாய் இணைப்புகள் இருந்தன.
2024ம் ஆண்டுக்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடீநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில்தான் ஜல்ஜீவன் திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இத்திட்டம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பங்களிப்புடன் அமல்படுத்தப்படுகிறது. கொவிட் தொற்று அதைத் தொடர்ந்த ஊரடங்கு சவால்களுக்கு இடையிலும், 4.30 கோடி வீடுகளுக்கு மேல் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 4.22 கோடி (39 சதவீதம்) கிராம வீடுகள், குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுள்ளன. கோவா, தெலங்கானா, அந்தமான மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு உள்ள பகுதியாக மாறியுள்ளன. இங்குள்ள கிராமத்தில் ஒரு வீடு கூட விடுபடவில்லை. இங்குள்ள 61 மாவட்டங்கள் மற்றும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு கிராம குடும்பங்களுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
****
(Release ID: 1721645)
Visitor Counter : 190