ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக ரெம்டெசிவர் ஒதுக்கீடு – திரு டி.வி.சதானந்த கவுடா

Posted On: 23 MAY 2021 7:32PM by PIB Chennai

இம்மாதம் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான காலத்திற்கு, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 22.17 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை கூடுதலாக ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய இரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.

மே 23 ஆம் தேதி வரையில், 76.70 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இது வரையில் 98.87 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்து நாடெங்கிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721120

 

******


(Release ID: 1721156) Visitor Counter : 241