மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மே 25 ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் : மத்திய அரசு வேண்டுகோள்

Posted On: 23 MAY 2021 5:51PM by PIB Chennai

12ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் தொழிற் கல்வி நுழைவு தேர்வுகள் நடத்துவது குறித்து விவாதிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தலைமையில் தேசியளவிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் சார்பில் தேசியளவிலான ஆலோசனைக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டதுஇந்த கூட்டத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க்’, பெண்கள் மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்ஜே தோத்ரே, உயர் கல்வித்துறை செயலாளர் திரு. திரு அமித் காரே, பள்ளி கல்வித்துறை செயலாளர் திருமதி அனிதா கர்வால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் மற்றும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்துவது பற்றி ஆலோசிக்க, உயர்நிலைக் கூட்டம் பிரதமர் தலைமையில் கடந்த 21ம் தேதி நடந்தது. இதில் கேபினட் அமைச்சர்கள் 9 பேர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த கூட்டம் நடந்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முதல் முக்கியத்துவம் அளிப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கல்வி அமைப்பின் சுமூகமான செயல்பாடு ஆகியவற்றை உறுதி செய்ய ஒட்டு மொத்த நாடும் ஒன்றாக இணைந்து வருகிறது என அமைச்சர் கூறினார்.

மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வேலைகளை தீர்மானிப்பதில் 12ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் ஆலோசித்தார்தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து, உள்ளீட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் 12ம் வகுப்பு தேர்வு முக்கியம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பினருடனும் நடத்தப்பட்ட ஆலோசனை, மாணவர்களின் நலன் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் தேர்வுகள் குறித்தும் பொருத்தமான முடிவு எடுக்க உதவும் என திரு ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்தார்.  

இரண்டு விஷயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 12ம் வகுப்புக்கு சிபிஎஸ்இ மற்றும் இதர மாநிலங்களின் வாரிய தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் படிப்புகளுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

தேர்வு முறை, நடைமுறை, தேர்வு நடத்தும் நேரம் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஒருமனதான முடிவு இருந்தாலும், இந்த விஷயத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆலோசித்து தங்கள் கருத்துக்களை மே 25ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தேர்வு நடத்தும் திட்டம் குறித்து நேர்மறையான கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், தங்கள் கருத்துக்களை கல்வி அமைச்சகத்துக்கு மே 25ம் தேதி செவ்வாய் கிழமைக்குள் தெரிவிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். அனைத்து ஆலோசனைகளையும் ஆலோசித்து, 12ம் வகுப்புக்கு தேர்வு நடத்தும் விஷயத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் விரைவில் இறுதி முடிவு எடுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721088

-----(Release ID: 1721125) Visitor Counter : 157