சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச கொவிட் நிவாரண உதவி பொருட்கள் விவரம்

Posted On: 23 MAY 2021 1:49PM by PIB Chennai

பல நாடுகள் / அமைப்புகள் அனுப்பிவரும் கொரோனா நிவாரண மருத்துவ பொருட்களை, மத்திய அரசு கடந்த மாதம் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது. அவைகள் உடனுக்குடன், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல், மே 22ம் தேதி வரை, மொத்தம்  16,630 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 15,961 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள்,  11,516 வென்டிலேட்டர்கள், 6.9 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் சாலை மார்க்கமாகவும், வான்வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த மே 21 மற்றும் 22ம் தேதிகளில் ஸ்காட்லாந்து (இங்கிலாந்து), ஜிலீட், யுஎஸ்ஐஎஸ்பிஎப், கோய்சா (தென்கொரியா), புத்த சங்கம் (வியட்நாம்) ஆகியவற்றிடமிருந்து 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 100 வென்டிலேட்டர்கள், 29,296 ரெம்டெசிவிர் குப்பிகள் பெறப்பட்டன. மேலும், நெகட்டிவ் பிரஷர் கேரியர்ஸ் மற்றும் வைரல் ட்யூப் மீடியா ஆகியவையும் பெறப்பட்டன.

இவற்றை, உடனடியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகின்றன

இந்தப் பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக ஒரு பிரத்தியேக ஒருங்கிணைப்பு குழு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் 26ம் தேதி முதல் செயல்படுகிறது. இதற்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் கடந்த 2ம் தேதி அமல்படுத்தப்பட்டன.

------(Release ID: 1721068) Visitor Counter : 91