அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பிராணவாயு செறிவூட்டிகளின் முக்கிய பாகங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான திட்ட முன்மொழிவுகள் வரவேற்பு

Posted On: 22 MAY 2021 4:19PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக அவசர கால மருத்துவ தேவையாக உள்ள பிராணவாயு செறிவூட்டிகளை இந்தியாவில் தயாரிப்பதற்காக அது தொடர்பான முக்கிய பாகங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபடும் புதிய முன்முயற்சியை அரசு விரைவில் மேற்கொள்ள உள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்த போதும், மருத்துவ அவசர காலத்தில் விலைமதிப்பில்லா பொருளாகவே பிராணவாயு நீடிக்கிறது.

இந்த முன்முயற்சியின்படி, பிராணவாயு செறிவூட்டிகளின் தயாரிப்பில்  ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காக கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்/ ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதுமை நிறுவனங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் தொழில் நிறுவனங்களின் திட்ட முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன

தொழில் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வி/ ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன்  இணைந்து இணை- ஆராய்ச்சியாளராக பணியாற்ற வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கான கால அவகாசம் ஒரு வருடமாகும்.

http://www.serbonline.in/ என்ற அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையில் ஜூன் 15- ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ  திட்ட முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720877

*****************



(Release ID: 1720944) Visitor Counter : 218