அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொரோனா 2-ஆவது அலை: புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களை உருவாக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பு
Posted On:
21 MAY 2021 8:15AM by PIB Chennai
நாட்டில் நிலவும் தற்போதைய சவாலான, கொவிட் இரண்டாவது அலையை சமாளிப்பதற்கான தொடக்க முயற்சிகளுக்கு விரைந்து உதவுவதற்காக, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
நிதிஃபார்கொவிட்2.0 (NIDHI4COVID2.0) என்ற ஒரு புதிய முயற்சியின் கீழ் விண்ணப்பிக்கக்கூடிய நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தகுதியான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி, சிறிய தீர்வு, கொவிட் தொடர்புடைய மருத்துவ பாகங்கள், நோயறிதல் போன்றவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் நெருக்கடியை எதிர்கொள்ள உள்நாட்டுத் தீர்வுகளையும், புதுமையான தயாரிப்புகளையும் ஆதரிப்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியம் (என்எஸ்டிஇடிபி), இந்த சிறப்பு முயற்சியை எடுத்துள்ளது. இது கொவிட்-19 நெருக்கடிக்கு எதிராக போராட உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720482
•••••••••
(Release ID: 1720581)