பாதுகாப்பு அமைச்சகம்
டவ்-தே புயல் பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டு
प्रविष्टि तिथि:
20 MAY 2021 1:36PM by PIB Chennai
டவ்-தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
கடலில் சிக்கி தவித்தவர்களின் உயிரை காப்பாற்றும் பணியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படைகள் ஈடுபட்டுள்ளது, மீட்பு பணிகளுக்கு இந்திய ராணுவம் வீரர்களை அனுப்பியது, தேசிய பேரிடர் மீட்பு பணி வீரர்களை, விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை கொண்டு சென்றதை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, விமானப்படை தளபதி ஏர்சீப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா, கடலோர காவல் படை தலைமை இயக்குனர் திரு கே. நடராஜன் ஆகியோருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அடிக்கடி பேசிவருகிறார்.
அவர்கள் தேடுதல், மற்றும் மீட்பு பணியின் நிலவரங்களை, அவ்வப்போது அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, மும்பை கடல் பகுதியில் 3 படகுகளில் சென்ற 600க்கும் மேற்பட்டோரை, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மீட்டன. காணாமல் போன 38 பேரை தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் இன்னும் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720211
*****************
(रिलीज़ आईडी: 1720254)
आगंतुक पटल : 283