எரிசக்தி அமைச்சகம்
இந்திய மின் தொகுப்புக் கழகத்தின் கொவிட் தடுப்பூசி முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2021 10:32AM by PIB Chennai
எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின் தொகுப்புக் கழகம், நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி முகாமை நடத்தியது. தடுப்பூசிக்கான செலவை மின் தொகுப்புக் கழகம் ஏற்றுக்கொண்டது.
பல்வேறு முகாம்களில் மே 10 முதல் 17 ஆம் தேதி வரை குருகிராமில் மேக்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் சுமார் 1600 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பணி நிறைவு பெற்று பணியில் தொடரும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேக்ஸ், ஃபார்டிஸ் மற்றும் ஆர்டெமிஸ் ஆகிய மருத்துவமனைகளுடன் இணைந்து மார்ச் 31 முதல் மே 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 700க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட மற்றொரு முகாமில் எரிசக்தி அமைச்சகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 80 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட சுமார் 290 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேசிய தலைநகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மூன்று முகாம்களில் மொத்தம் ஏறத்தாழ 2600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
18-44 வயது வரையிலான பிரிவினருக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த முகாம்களில் தடுப்பூசி வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720155
************************
(வெளியீட்டு அடையாள எண்: 1720242)
வருகையாளர் எண்ணிக்கை : 210