நித்தி ஆயோக்
அடல் புத்தாக்க திட்டம் (ஏஐஎம்) - டென்மார்க் புத்தாக்க மையம் (ஐசிடிகே) இணைந்து நடத்திய புதுமை சவால் போட்டி வெற்றியுடன் முடிந்தது
Posted On:
19 MAY 2021 12:05PM by PIB Chennai
இந்தியா-டென்மார்க் இடையேயான உத்தி கூட்டுறவு காரணமாக அடல் புத்தாக்க திட்டம் மற்றும் டென்மார்க் புத்தாக்க மையம் ஆகியவை இணைந்து ‘அடுத்த தலைமுறைக்கான தண்ணீர் நடவடிக்கை திட்டம் ’ என்ற புதுமை சவால் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்த சவால் போட்டியை சர்வதேச தண்ணீர் சங்கம் மற்றும் டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தியது.
இந்த சவால் போட்டிக்கு 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இறுதியில், 10 இந்திய குழுக்கள் அடையாளம் காணப்பட்டன. இவர்களில் 6 குழுக்கள் மாணவர்களின் குழுக்கள், 4 குழுக்கள் தொடக்க நிறுவனங்களின் குழுக்கள். தேர்வு செய்யப்பட்ட குழுக்கள், இந்தியா சார்பில் இந்த போட்டியில் பங்கேற்றன.
இந்தியா, டென்மார்க், கென்யா, கானா மற்றும் தென்கொரியா ஆகிய 5 நாடுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த இளம் திறமைசாலிகளை ஈடுபடுத்துவதற்காக இந்த போட்டியை டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்தியது.
இதன் மூலம் இவர்களின் திறமை, புத்தாக்க திறன் ஆகியவற்றை மேம்படுத்த முடியும். ஸ்மார்ட் நகரங்களுக்கான தண்ணீர் சவால்களுக்கு தீர்வு காண முடியும்.
டிஜிட்டல் தண்ணீர் மேலாண்மை தீர்வுகள், நகரங்களில் தண்ணீர் விநியோகத்தில் ஏற்படும் கசிவுக்கு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், ஊரகம் மற்றும் நகரப்புற குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, பாதுகாப்பான நிலையான குடிநீர் குறித்த சவால்களுக்கு புத்தாக்க கருத்துக்களை சமர்பிக்கும்படி இந்திய குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சவால்களை தீர்ப்பதில் 3 இந்திய மாணவர்கள் குழு, டென்மார்க் மற்றும் தென்கொரியாவில் இருந்து ஒரு குழுவும் ஈடுபட்டன. மேலும் ஒரு இந்தியக் குழு கானா, டென்மார்க், மற்றும் பிரேசில் நாடுகளின் குறிப்பிட்ட சவால் போட்டியில் பங்கேற்றது.
இந்த உலகளாவிய போட்டி நிகழ்ச்சியில் 11 தொடக்க நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் 4 இந்திய தொடக்க நிறுவனங்கள். அடுத்த தலைமுறைக்கான தண்ணீர் நடவடிக்கை திட்டத்தின் இறுதி போட்டியில் தொடக்க நிறுவனங்கள் போட்டியிட்டன.
இந்தக் குழுக்கள் தங்களது இறுதி புத்தாக்க திட்டத்தை கடந்த ஏப்ரல் 30ம் தேதி சமர்ப்பித்தன. அரை இறுதி போட்டி மே 12ம் தேதி முடிந்தது. இதில் பங்கேற்ற 6 இந்திய மாணவர்கள் குழுக்களில், 4 குழுக்கள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. இறுதி போட்டி டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மே 18ம் தேதி நடந்தது.
இறுதிப் போட்டியில் 3 மாணவர்கள் குழுவும், 2 தொடக்க நிறுவனங்கள் குழுவும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன. இவற்றின் விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719836
----
(Release ID: 1719919)