பாதுகாப்பு அமைச்சகம்

டவ்-தே புயல் எதிர்கொள்ள இந்திய விமானப் படை ஆயத்தம்

Posted On: 17 MAY 2021 8:30AM by PIB Chennai

டவ்-தே புயலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்பணிகளுக்காக, மே 16 அன்று, தேசிய பேரிடர் நிவாரணப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) 167 பணியாளர்களையும், 16.5 டன் நிவாரணப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு, இரண்டு சி-130ஜே மற்றும் ஒரு ஆன்-32 இரக விமானங்கள், கொல்கத்தாவிலிருந்து அகமதாபாத்திற்கு சென்றுள்ளன.  அன்-32 விமானம் இப்போது அகமதாபாத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

மற்றொரு சி-130ஜே மற்றும் இரண்டு ஆன்-32 விமானங்களும். 121 என்.டி.ஆர்.எஃப் பணியாளர்களையும் 11.6 டன் நிவாரணப் பொருட்களையும் விஜயவாடாவிலிருந்து அகமதாபாத்திற்கு கொண்டு சென்றன.

மேலும், 2 சி-130ஜே விமானம், 110 பணியாளர்களையும், 15 டன் சரக்குகளையும் என்.டி.ஆர்.எஃப்-க்கு புனேவிலிருந்து அகமதாபாத்திற்கு கொண்டு சென்றது. 

புகைப்படங்கள் மற்றும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719221


***************(Release ID: 1719291) Visitor Counter : 172