ரெயில்வே அமைச்சகம்

இன்று தமிழகம் வருகிறது முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்

Posted On: 13 MAY 2021 5:23PM by PIB Chennai

மேற்கு வங்கம் துர்காபூரிலிருந்து தமிழகத்துக்கு, முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன் இன்று இரவு வருகிறது.  

நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு, 444 டேங்கர்களில், 7115 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை, இந்திய ரயில்வே இதுவரை விநியோகித்துள்ளது.

நேற்று 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகித்தன.

இதுவரை 115 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனது பயணத்தை முடித்துள்ளன.

இதுவரை மகாராஷ்டிராவுக்கு 407, உத்தரப்பிரதேசத்துக்கு 1960, மத்தியப் பிரதேசத்துக்கு 361, ஹரியானாவுக்கு 1135, தெலங்கானாவுக்கு 188, ராஜஸ்தானுக்கு 72, கர்நாடகாவுக்கு 120, தில்லிக்கு 2758 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. 

மேற்கு வங்கம் துர்காபூரிலிருந்து தமிழகத்துக்கு, முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன், இன்று இரவு வருகிறது.  

இன்னும் பல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு இன்று இரவு புறப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718326

*****************

 



(Release ID: 1718349) Visitor Counter : 198