சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச கொவிட் நிவாரண உதவிகளை, மாநிலங்களுக்கு விரைவாக அனுப்புகிறது மத்திய அரசு

प्रविष्टि तिथि: 13 MAY 2021 4:51PM by PIB Chennai

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், சர்வதேச நாடுகள் நன்கொடையாக அளிக்கும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது. இவற்றை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரைவாக வழங்க, மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான அமைப்பின் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.  

2021 ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை, மொத்தம் 9,294 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 11,835 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், 6,439 வென்டிலேட்டர்கள், சுமார் 4.22 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை சாலை மார்க்கமாகவும், வான் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளன.

குவைத், சிங்கப்பூர், ஜிலீட், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், எகிப்து போன்ற நாடுகளில் இருந்து மே 12ம் தேதி பெறப்பட்ட முக்கிய பொருட்கள்:

-ரெம்டெசிவிர்: 86,595

- ஆக்ஸிஜன் சிலிண்டர் : 4,802

- ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : 10

-வென்டிலேட்டர்/பிபாப்/சிபாப் : 141

இவற்றை மாநிலங்கள் /யூனி்யன் பிரதேசங்களுக்கு திறம்பட ஒதுக்கீடு செய்து, விநியோகிப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.  இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவாக கண்காணித்து வருகிறது. இவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக  ஒரு பிரத்தியேக பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரிவு கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. இதற்காக ஒரு நிலையான செயல்பாட்டு வழிமுறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வகுத்து கடந்த 2ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.

*****************


(रिलीज़ आईडी: 1718341) आगंतुक पटल : 309
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada