சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக நீட்டிப்பு

Posted On: 13 MAY 2021 4:28PM by PIB Chennai

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டித்து டாக்டர் என் கே அரோரா தலைமையிலான கொவிட் செயற்குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது இரண்டு டோஸ்களுக்குமான இடைவெளி 6-8 வாரங்களாக உள்ளது.

நிஜ வாழ்வின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு (குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து) கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை நீட்டிக்க செயற்குழு ஒப்புதல் தெரிவித்தது. கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை.

கீழ்காணும் உறுப்பினர்கள் கொவிட் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்:

1.       டாக்டர் என் கே அரோரா- இயக்குநர், இன்க்ளென் அறக்கட்டளை

2.       டாக்டர் ராக்கேஷ் அகர்வால், இயக்குநர் மற்றும் தலைவர், ஜிப்மர், புதுச்சேரி

3.       டாக்டர் ககன்தீப் கங், பேராசிரியர், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்

4.       டாக்டர் ஜே பி முல்லியால், ஓய்வு பெற்ற பேராசிரியர், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்

5.       டாக்டர் நவீன் கண்ணா, குழு தலைவர், மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி

6.       டாக்டர் அமுல்யா பாண்டா, இயக்குநர், தேசிய நோயெதிர்ப்பியல் நிறுவனம், புது தில்லி

7.       டாக்டர் வி ஜி சோமானி, தலைவர்இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய அரசு

கொவிட் செயற்குழுவின் பரிந்துரையை மே 12 அன்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் தலைமையிலான கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு ஏற்றுக்கொண்டது.

இந்தப் பரிந்துரையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718308

*****************


(Release ID: 1718330) Visitor Counter : 397