மத்திய அமைச்சரவை

ரோப் கார் வசதி சேவைக்காக இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான நிலத்தை, உத்தரகாண்ட் அரசுக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 MAY 2021 3:29PM by PIB Chennai

ரோப் கார் வசதி ஏற்படுத்துவதற்காக இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான நிலத்தை, உத்தரகாண்ட் அரசுக்கு மாற்றவும், இந்திய பட்டய கணக்காளர் மையம்(ஐசிஏஐ) மற்றும் கத்தார் நிதி மையம் ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும்  மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் பல திட்டங்கள், ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மசூரியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்  படைக்கு சொந்தமான 1500 சதுர மீட்டர் நிலத்தை உத்தரகாண்ட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டேராடூனிலிருந்து, மசூரி வரை, 5580 மீட்டர் தூரத்துக்கு ரோப் கார் போக்குவரத்து வசதியை ரூ.285 கோடி செலவில் உத்தரகாண்ட் அரசு அமைக்கிறது. இந்த ரோப் கார்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 1000 பேர் பயணம் செய்ய முடியும். இது டேராடூனிலிருந்து, மசூரி  வரையிலான சாலை போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும். இத்திட்டம் மூலம் 350 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1500 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

மேலும், இந்திய பட்டய கணக்காளர் மையம்(ஐசிஏஐ) மற்றும் கத்தார் நிதி மையம் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்கள் இடையே ஒத்துழைப்பு, கத்தாரில் இந்திய பட்டய கணக்காளர்களுக்கு  வேலை வாய்ப்பு ஆகியவற்றை  மேம்படுத்தும். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கத்தாரில் பணியாற்றும் 6 ஆயிரம் பேர்  ஐசிஏஐ-யில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கத்தாரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் உள்ளனர். கத்தாரின் பட்டய கணக்கு தொழிலுக்கு உதவுவதிலும், மேம்படுத்துவதில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் ஐசிஐஏ உறுப்பினர்கள் சிறந்த அங்கீகாரத்தை பெறுவதற்கான கூடுதல் உத்வேகம் கிடைக்கும்மேலும் கத்தாரில் தொழில் செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கும் ஆதரவாக இருக்கும். கத்தாரில் உள்ள தொழில் முனைவோர்கள், மாணவர்களுக்கு ஐசிஏஐ பயிற்சி அளித்து மேம்படுத்தவும் உதவும்.

கனரக தொழில்துறையின் திட்ட முன்மொழிவுக்கு இணங்க, ரூ. 18,100 கோடி செலவில் மேம்பட்ட வேதியியல் மின்கலத்தின் 50 ஜிகாவாட் ஹவர், “முக்கியத்துவம் வாய்ந்த” மேம்பட்ட வேதியியல் மின்கலத்தின் ஹவர் 5 ஜிகாவாட் உற்பத்தித் திறனை அடைவதற்காக மேம்பட்ட வேதியியல் செல் மின்கலத்தின் சேமிப்பு குறித்த தேசிய திட்டத்திற்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகையை வழங்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.

சிறந்த சேமிப்பு தொழில்நுட்பத்தின் புதிய தலைமுறையான மேம்பட்ட வேதியியல் மின்கலன், மின்சாரத்தை மின் வேதியியல் அல்லது வேதியியல் எரிசக்தியாக சேமித்து தேவை ஏற்படும்போது அவற்றை மீண்டும் மின்சக்தியாக மாற்றும் தன்மை உடையது. மின்கலத்தின் பயன்பாடு அதிகமுள்ள துறைகளான நுகர்வோர் மின்னணு சாதனங்கள், மின்சார வாகனங்கள், மேம்பட்ட மின்சார தொகுப்புகள், சூரிய மின்சக்தி கூரைகள், போன்றவை வரும் காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்கலத்தை அடிப்படையாகக்கொண்ட தொழில்நுட்பங்கள், உலகின் மிகப்பெரிய வளர்ந்து வரும் துறைகளை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்கலன் சார்ந்த தொழில்நுட்பங்களில் ஏராளமான நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடு செய்ய தொடங்கிவிட்டன. சர்வதேச சராசரி அளவுடன் ஒப்பிடுகையில் இவற்றின் திறன் குறைவாக இருந்த போதும், இந்தியாவில் மேம்பட்ட வேதியியல் மின்கலத்தின் மதிப்புக்கூட்டலுடன் உற்பத்தியில் குறைந்த அளவான முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேம்பட்ட வேதியியல் மின்கலத்தின் அனைத்துத் தேவைகளும் இறக்குமதியின் வாயிலாக இந்தியாவில் நிறைவேற்றப்படுகிறது. மேம்பட்ட வேதியியல் செல் மின்கலன் சேமிப்பு குறித்த தேசிய திட்டத்தின் மூலம் இறக்குமதியின் மீதான சார்பு குறையும். தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கும் அது ஆதரவளிக்கும். மேம்பட்ட வேதியியல் செல் மின்கல சேமிப்பு உற்பத்தியாளர்கள் வெளிப்படையான முறையில் ஏலத்தின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி மையம் நிறுவப்பட வேண்டும். அதற்குப் பிறகு ஐந்து ஆண்டு காலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அதிகரிக்கப்பட்ட குறிப்பிட்ட எரிசக்தியின் அடர்த்தி மற்றும் சுழற்சிகள், உள்நாட்டு மதிப்பு கூட்டலில் உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஊக்கத் தொகை உயரும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உற்பத்தியாளர் குறைந்தபட்சம் ஹவர்  ஐந்து ஜிகாவாட் திறன் கொண்ட உற்பத்தி மையங்களை நிறுவவும், ஐந்து ஆண்டுகளுக்குள் திட்ட அளவில் குறைந்தபட்சம் 60% உள்நாட்டு மதிப்புக் கூட்டலை உருவாக்கவும் உறுதி மேற்கொள்ள வேண்டும்.  மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள்  (ஆதார பிரிவின் அளவில்) குறைந்தபட்சம் 25 சதவீத உள்நாட்டு மதிப்பு கூட்டலும் கட்டாய முதலீடாக ரூ. 225 கோடி/ஜிகாவாட் ஹவர் அடையவும் அதனை 5 ஆண்டுகளுக்குள் 60 சதவீத உள்நாட்டு மதிப்பு கூட்டலாகவும் உயர்த்த வேண்டும்.

இந்தத் திட்டத்தின் முக்கிய பலன்கள்:

  • இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 50 ஜிகாவாட் ஹவர் மேம்பட்ட வேதியியல் மின்கல உற்பத்தி மையங்களை நிறுவுவது
  • மேம்பட்ட வேதியியல் மின்கல சேமிப்பு உற்பத்தித் திட்டங்களில் நேரடி முதலீடாக சுமார் ரூ. 45,000 கோடி
  • இந்தியாவில் மின்கல சேமிப்பிற்கான தேவைகளை உருவாக்குதல்
  • மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவித்தல்: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி அதன் வாயிலாக இறக்குமதியின் மீதான சார்பை குறைத்தல்
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் சூழலில் இந்த திட்டம் இந்தியாவின் பசுமை குடில் எரிவாயுவின் வெளியேற்றத்தைக் குறைக்கும்
  • இறக்குமதிக்கு மாற்றலாக ஒவ்வொரு வருடமும் ரூ. 20,000 கோடி

 

  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஊக்குவிப்பு
  • புதுமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மின்கலன் தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717939

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717940

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717938

------



(Release ID: 1718071) Visitor Counter : 302