சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தடுப்பு மருந்து வழங்கலின் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆய்வு

Posted On: 11 MAY 2021 2:58PM by PIB Chennai

கொவிட் தடுப்பு மருந்து வழங்கலின் நிலவரம் குறித்து சுகாதார செயலாளர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநர்களுடன் காணொலி மூலம் மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் மற்றும் கொவிட்-19- கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் தரவு மேலாண்மைக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவரும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் உறுப்பினருமான டாக்டர் ஆர் எஸ் சர்மா இன்று ஆய்வு செய்தனர்.

தடுப்பு மருந்து வழங்கலின் நடவடிக்கையின் பல்வேறு கூறுகள் குறித்த மாநில வாரியான விரிவான விளக்கத்திற்கு பிறகு, கீழ்க்கண்டவற்றை மத்திய சுகாதார செயலாளர் எடுத்துரைத்தார்:

* முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட அனைத்து பயனாளிகளும் முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் டோஸ் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். அதிக அளவிலான பயனாளிகள் இரண்டாம் டோசுக்காக காத்திருப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.

2. இந்திய அரசு மூலம் வழங்கப்படும் தடுப்பு மருந்துகள் குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படுகிறது. எனவே அதன் அடிப்படையில் மாநிலங்கள்  திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

3. தடுப்பு மருந்து வீணாவதை தடுக்குமாறு மாநிலங்கள் வலியுறுத்தப்பட்டன. வீணாகும் அளவு ஒட்டுமொத்தமாக குறைந்திருந்தாலும் ஒரு சில மாநிலங்களில் தடுப்பு மருந்து வீணாதல் இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் குறிப்பிட்டார். தடுப்பு மருந்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் இனிமேல் தடுப்பு மருந்துகள் வீணானால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இருக்கும் ஒதுக்கீட்டில் பிடித்தம் செய்யப்படும்.

4. தடுப்பு மருந்து வழங்கலின் தாராளமயமாக்கப்பட்ட மூன்றாம் கட்டத்தில் இந்திய அரசு தவிர மற்ற வழிகளிலும் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து மாநிலஙகளுக்கு விளக்கப்பட்டது. தனியார் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு மாநிலங்கள் நிலுவை வைத்துள்ள கட்டணங்களை பொருத்தவரை, இரண்டு அல்லது மூன்று மூத்த அதிகாரிகளை நியமித்து தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் தினசரி ஒருங்கிணைத்து விநியோகங்களை முறைப்படுத்தலாம். இதே குழு தனியார் மருத்துவமனைகளையும் ஒருங்கிணைக்கலாம். இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் முன்னேற்றம் அடையும்.

5. தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் மாறிவரும் தேவைகளை கருத்தில் கொண்டு கோவின் தளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு தடுப்பு மருந்தை சிறப்பான முறையில் வழங்குவதற்காக இரண்டாம் டோஸ் நிலுவை அறிக்கையை மாநிலங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைக்கேற்ப தடுப்புமருந்து வழங்கல் அமர்வின் அளவை அதிகாரிகள் அதிகரித்துக் கொள்ளலாம். புகைப்பட அடையாள அட்டை இல்லாத பயனாளிகளையும் பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பு மருந்து பயன்பாடு அறிக்கையையும் மாவட்ட தடுப்பு மருந்து அலுவலர் மற்றும் தடுப்பு மருந்து வழங்கல் மைய மேலாளர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**


(Release ID: 1717735)