நிதி அமைச்சகம்
‘சமூக கட்டமைப்பு நிதி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ’’பயன்பாடு குறித்த காணொலி காட்சி கருத்தரங்கு: பொருளாதார விவகாரத்துறை மற்றும் புதிய வளர்ச்சி வங்கி இணைந்து நடத்துகிறது
Posted On:
11 MAY 2021 12:47PM by PIB Chennai
இந்தியா பிரிக்ஸ் தலைமை 2021-ன் கீழ் பொருளாதாரம் மற்றும் நிதி ஒத்துழைப்பு கொள்கையின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை இணைந்து ‘‘சமூக கட்டமைப்பு நிதி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு’’ என்ற தலைப்பில் காணொலி காட்சி கருத்தரங்கை, வரும் 13ம் தேதி நடத்துகின்றன.
குழு விவாதங்கள் மற்றும் இரு கருப்பொருள் அமர்வுகளின் போது, கீழ்கண்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
1. நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க, சமூக கட்டமைப்பில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம்.
2. சமூக கட்டமைப்புக்கு நிதியளிப்பது தொடர்பான சவால்களை சமாளிக்கும் வழிகள்.
3. தனியார் துறை பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் திட்டங்களில் சிரமங்களை போக்கும் வழிகள்.
4. கொவிட்-19 பாதிப்புக்கு பின் சுகாதாரம் மற்றும் கல்வி அளிப்பதை மேம்படுத்த சமூக கட்டமைப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மதிப்பு.
5. பிரிக்ஸ் நாடுகளில் சமூக கட்டமைப்பு நிதிக்கு சாத்தியமான வழிகளை ஆராய்தல்.
இந்நிகழ்ச்சியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் திரு அஜய் சேத், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு மார்கஸ் ட்ராய்ஜோ ஆகியோர் துவக்கவுரை நிகழ்த்துவர். முக்கிய உரையை, கொலம்பிய பல்கலைக்கழகத்தின், நிலையான வளர்ச்சி மைய இயக்குனர் பேராசிரியர் ஜெப்ரி டி.சக்ஸ் நிகழ்த்துவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717608
----
(Release ID: 1717706)
Visitor Counter : 255