சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

40% க்கும் குறைவான உடல் குறைபாடு உள்ளவர்கள் முதலிய மாற்றுத் திறனாளிகள், எழுத்துத் தேர்வின் போது பின்பற்றவேண்டிய வரைவு வழிகாட்டுதல்கள் பற்றிய பொதுமக்களின் கருத்துகள் வரவேற்பு

Posted On: 11 MAY 2021 2:45PM by PIB Chennai

40% க்கும் குறைவான உடல் குறைபாடு உள்ள ஊனமுற்றோர் அல்லது எழுத்துத் திறனைக் கட்டுப்படுத்தும் மருத்துவ பிரச்னைக் கொண்ட நபருக்கு எழுத்துத் தேர்வின்போது எழுத்தர்/கூடுதல் நேரம் வழங்கப்படுவது   வழிகாட்டுதல்களை இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை வடிவமைத்துள்ளது.

40% அல்லது அதற்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ளவர்கள் எழுத்துத் தேர்வின் போது பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை 29.08.2018 அன்று இந்தத் துறை வெளியிட்டது.

எனினும் 40 %க்கும் குறைவான குறைபாடு உள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு 11.02.2021 அன்று உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறைக்கு உத்தரவிட்டது

இதையடுத்து, இந்தத் துறையின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் வரைவு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுhttps://drive.google.com/file/d/ 11wUZoURvO4gTgb0S2KmHTz9Roe8vK1qY/view என்ற மின் முகவரியில் இடம் பெற்றுள்ளது.

2021 ஜூன் 1-ஆம் தேதி வரை இந்த வரைவு வழிகாட்டுதல்கள் மீது பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை தெரிவித்துள்ளது. kvs.rao13[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இயக்குநர், கோட்பாடு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு, என்று குறிப்பிட்டு பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717644

------



(Release ID: 1717680) Visitor Counter : 222