பிரதமர் அலுவலகம்
தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மரியாதை
प्रविष्टि तिथि:
11 MAY 2021 11:49AM by PIB Chennai
தேசிய தொழில்நுட்ப தினத்தன்று, விஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்பத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
“தேசிய தொழில்நுட்ப தினத்தன்று நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வமுள்ளவர்களின் கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் நாம் வணங்குகிறோம். இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லமையை நிரூபித்த 1998ஆம் ஆண்டின் போக்ரான் சோதனைகளை நாம் பெருமையுடன் நினைவு கூர்கிறோம்.
எந்த ஒரு சவாலான சூழ்நிலையிலும், நமது விஞ்ஞானிகளும், கண்டுபிடிப்பாளர்களும் தக்க தருணத்தில் முன்வந்து, சவாலை எதிர்கொள்வதற்காகப் பணியாற்றுகிறார்கள். கடந்த ஓராண்டாக கொவிட்- 19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் அயராது கடுமையாக உழைக்கின்றனர். அவர்களது முனைப்பையும், ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன்.”
-----
(रिलीज़ आईडी: 1717661)
आगंतुक पटल : 266
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam