வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பிராணவாயுவின் இருப்பு, விநியோகம், சேமிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பலதரப்பட்ட முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு


அதிக உற்பத்தி மற்றும் இறக்குமதி, பிஎஸ்ஏ ஆலைகளின் உருவாக்கம், பிராணவாயு செறிவூட்டிகளின் கொள்முதல் காரணமாக பிராணவாயு இருப்பு அதிகரிப்பு

நைட்ரஜன் மற்றும் ஆர்கான் டேங்கர்களின் மாற்றம், இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி, ரயில் மற்றும் விமான போக்குவரத்தினால் பிராணவாயு டேங்கர்களின் கையிருப்பு வலுவடைந்துள்ளது

தற்போதைய நிகழ்வை கண்காணிக்க பிராணவாயு டிஜிட்டல் கண்காணிப்பு முறை உருவாக்கம்

மருத்துவமனைகளில் உள்ள கிரையோஜெனிக் டேங்கர்களின் எண்ணிக்கை மற்றும் திறனை அதிகரித்து மருத்துவ பிராணவாயுவின் கொள்முதலை அதிகரித்ததால் கடைசி மைல் உள்கட்டமைப்பில் வளர்ச்சி

அவசரகால உபகரணங்களின் கொள்முதலை விரிவுபடுத்துவதற்காக பொது நிதி விதிமுறைகளில் தளர்வு

Posted On: 10 MAY 2021 5:41PM by PIB Chennai

நாட்டில் அதிகரித்துவரும் பிராணவாயுவின் தேவையை எதிர் கொள்வதற்காக பிராணவாயுவின் இருப்பை அதிகரிக்கவும், விநியோகத்தை சீரமைக்கவும், சேமிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பல முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.   பிராணவாயுவின் விநியோக சங்கிலியை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிராணவாயு உற்பத்தியை மேம்படுத்துதல், தளவாடங்களின் மேம்பாட்டிற்காக டேங்கர்களின் இருப்பை அதிகரித்தல், கடைசி மைல் வரை பிராணவாயுவின் சேமிப்பை மேம்படுத்துதல் மற்றும் கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகளை எளிதாக்குதல் போன்றவை இதில் அடங்கும்.

அதிக உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி, அழுத்த விசை உறிஞ்சுதல்  தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) மருத்துவ பிராணவாயு உற்பத்தி ஆலைகள் உருவாக்கம், வெளிநாடுகளிலிருந்து திரவ மருத்துவ பிராணவாயுவின் இறக்குமதி மற்றும் பிராணவாயு செறிவூட்டிகளின் கொள்முதல் முதலிய நடவடிக்கைகளின் மூலம் பிராணவாயுவின் இருப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தை சீரமைத்து டேங்கர்களின் இருப்பை அதிகப்படுத்துவதற்காக நைட்ரஜன் மற்றும் ஆர்கான் டேங்கர்களின் பயன்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன் டேங்கர்களும், கொள்கலன்களும் இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் டேங்கர்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு, ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் டேங்கர்கள் அங்கு நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனே திரும்பி வரும் வகையில் ரயில் மற்றும் விமானங்கள் வாயிலாக அவை கொண்டு செல்லப்படுகின்றன.

நிகழ்கால நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக பிராணவாயு டிஜிட்டல் கண்காணிப்பு முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், நடுத்தர மற்றும் கனரக ஊர்தி ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர்களின் இருப்பு உறுதி செய்யப்படுகிறது. பிராணவாயுவின் சேமிப்பை மேம்படுத்துவதற்காக மருத்துவமனைகளில் உள்ள கிரையோஜெனிக் டேங்கர்களின் எண்ணிக்கையும் திறனும் அதிகப்படுத்தப்படுவதுடன் மருத்துவ பிராணவாயு சிலிண்டர்களும் கொள்முதல் செய்யப்படுகின்றன.

அவசரகால உபகரணங்களை விரைவாக கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக பொது நிதி விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிராணவாயுவின் உற்பத்தி, போக்குவரத்து, சேமிப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:

பிராணவாயுவின் உற்பத்தி மற்றும் திறன் மேம்பாடு அதிகரிப்பு:

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாளொன்றுக்கு 5700 மெட்ரிக் டன்னாக இருந்த பிராணவாயு உற்பத்தி, 2021 மே மாதத்தில் 9,446 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளதுஉற்பத்தி திறன் நாளொன்றுக்கு 6817 மெட்ரிக் டன்னிலிருந்து 7314 மெட்ரிக் டன்னாகவும், திறன் பயன்பாடு 84 சதவீதத்திலிருந்து 129 சதவீதமாகவும் இந்தக் காலகட்டத்தில் உயர்ந்துள்ளது.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள மருத்துவ பிராணவாயுவின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த எஃகு நிறுவனங்கள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 2021 மே 4 அன்று  எஃகு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் திரவ மருத்துவ பிராணவாயுவின் மொத்த உற்பத்தி 3680.30 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஏப்ரல் மத்தியில் 1500-1700 மெட்ரிக் டன்னாக இருந்த மொத்த திரவ மருத்துவ பிராண வாயுவின் ஒரு நாளைய விநியோகம் ஏப்ரல் 25ஆம் தேதி 3131.84 மெட்ரிக் டன்னாகவும்அதைத் தொடர்ந்து மே 4 அன்று 4076.65 மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்தது.

திரவ மருத்துவ பிராணவாயுவின் உற்பத்தி மற்றும் தேவையுடன் அதன் விற்பனையும் உயர்ந்துள்ளது. 2021 மார்ச் மாதம் நாளொன்றுக்கு 1300 மெட்ரிக் டன்னாக இருந்த விற்பனை, மே 6-ஆம் தேதி 8920 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. கொவிட்-19 தொற்றின் முதல் அலையின்போது 2020 செப்டம்பர் 29ஆம் தேதி ஒரு நாளில் மிக அதிகமாக 3,905 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 31-ஆம் தேதி 1559 ஆக இருந்த திரவ மருத்துவ பிராணவாயுவின் விற்பனை மே 3ஆம் தேதி 5 மடங்கு உயர்ந்து 8000 மெட்ரிக் டன்னை எட்டியது.

பிராணவாயு உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்கள்:

பிராணவாயுவின் உற்பத்தித்திறனை வெகுவிரைவில் அதிகரிப்பதற்காக கூடுதல் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கர்நாடகாவில் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 70 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுசிறு நடுத்தர தொழில் துறையின் காற்று பிரித்தெடுத்தல் பிரிவிலிருந்து உபகரணங்கள்; சுத்திகரிப்பாலைகள் (11,950 படுக்கைகள்), எரிசக்தி அலைகள் (3,850 படுக்கைகள்), மற்றும் எஃகு ஆலைகள் (8,100 படுக்கைகள்) ஆகியவற்றிலிருந்து  பிராணவாயுவுடனான மிகப் பெரிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அத்தியாவசிய தேவை இல்லாத தொழில் நிறுவனங்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் பிராணவாயுவின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 1000 மெட்ரிக் டன் பிராணவாயு கிடைக்கிறது. மேலும் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 630 மெட்ரிக் டன் உற்பத்தியை நீட்டிக்கவும் எஃகுத் துறை திட்டமிட்டுள்ளது.

தேவை ஏற்படும் தொகுப்புகளுக்கு அருகில் பிராணவாயு விநியோகத்தை மேம்படுத்துவதற்காக 1594 பிஎஸ்ஏ ஆலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வாயிலாக பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) என்ற  அறக்கட்டளையின் கீழ் 162 ஆலைகள், 2021 மார்ச் மாதத்தில் பிஎம் கேர்ஸ்  அறக்கட்டளையின் கீழ் குடும்பநல அமைச்சகத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்ட 551 ஆலைகள்,  2021 ஏப்ரல் மாதத்தில் பிஎம் கேர்ஸ்  அறக்கட்டளையின் கீழ் டிஆர்டிஓ அனுமதியளித்த 500 ஆலைகள், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் 100 ஆலைகள் மற்றும் மாநிலங்களின் நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

162 பிஎஸ்ஏ ஆலைகளில் 74 ஆலைகள் நிறுவப்பட்டுள்ளனமீதமுள்ளவை 2021 ஜூன் மாதத்தில் நிறுவப்படும். 2021 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையின் கீழ் அனுமதி  கூடுதல் 1051 பிஎஸ்சி ஆலைகள் அடுத்த மூன்று மாதங்களில் பல கட்டங்களாக இயங்கத் தொடங்கும்.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இறக்குமதி

50,000 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 5,800 மெட்ரிக் டன் ஆக்ஸினுக்கான ஆர்டர்கள் மற்றும் விநியோக காலம் ஆகியவை இறுதி செய்யப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் பெறுவதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக உதவி வருகிறது. இந்த பணிகளை விரைவுபடுத்த, விலைப் பட்டியல் கடந்த மாதம் 21ம் தேதி பெறப்பட்டன. 3500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்களுக்கு விலைப் பட்டியல் பெறப்பட்டு, 3 மாதங்களில் விநியோகிக்க கடந்த ஏப்ரல் 21ம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டன. மேலும், 2285 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன், ஐக்கிய அரபு எமிரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றில் ஒரு பகுதி ஏற்கனவே வந்து விட்டது.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொள்முதல்

பிரதமர் நல நிதியிருந்து 1 லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்க கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான டெண்டர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி விடப்பட்டது. 2,500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்க ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனம் விடுத்த டெண்டருக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து 50,000 செறிவூட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. 9,800 கருவிகளை வாங்குவதற்கான ஆர்டர் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 4,800 கருவிகள் மே 15ம் தேதியும், 5,000 கருவிகள் மே 27ம் தேதியும் வழங்கப்படவுள்ளன. மேலும், 70,000 முதல் 75,000 செறிவூட்டிகளை வழங்க 55 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்கான ஆர்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. வாக்குறுதிப்படி குறிப்பிட்ட தேதியில் விநியோகிக்கும் அடிப்படையில் இந்த ஆர்டர்கள் கொடுக்கப்படும்.

ஆக்ஸிஜன் ஒதுக்கீடு முறை

தேவைக்கேற்ப, அனைத்து மாநிலங்களுக்கு சம அளவில் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு உத்தரவு, கடந்த ஏப்ரல் 15ம் தேதி வழங்கப்பட்டது. இவை மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன. கொவிட் 2வது அலை மற்ற மாநிலங்களுக்கும் பரவியதால், மற்ற மாநிலங்களில் இருந்தும் ஆக்ஸிஜன் கோரிக்கை அதிகரித்தது. இதனால் ஒவ்வொரு மாநிலத்துக்கும், பாதிப்புகளின் அடிப்படையில்  ஆக்ஸிஜன் தேவையை மதிப்பிட ஒரு விதிமுறையை  மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வகுத்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் மதிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு ஏற்ப ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்வதில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஒதுக்கீடு இறுதி செய்யும்போது, ஐசியு படுக்கைகள் உட்பட மருத்துவமனை கட்டமைப்பு வசதிகள் போன்ற இதர காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட்டது.

நாட்டில் ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குமுறைபடுத்த, ஆக்ஸிஜன் ஒதுக்கீடு நடைமுறை தொடர்ச்சியாக வகுக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைப்படி தேவை அடிப்படையில் பல தரப்பினருடன் ஆலோசித்து  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்வது மிகவும் ஆற்றல் வாய்ந்த பணி. உற்பத்தி மற்றும் நுகர்வில் மாநிலங்களுக்கு இடையே பொருத்தமற்ற நிலை இருந்தது மற்றும் மாநிலங்கள் இடையே சம அளவிலான விநியோகத்தை பராமரிக்க வேண்டும். மேலும், உற்பத்தியில் 3ல் ஒரு பங்கு இந்தியாவின் கிழக்கு பகுதியில் நடக்கிறது. 60 சதவீத ஆக்ஸிஜன் தேவை வடக்கு மற்றும் தென்னிந்தியாவில் உள்ளது. இதனால் போக்குவரத்து சவால்கள் ஏற்பட்டன. உற்பத்தி செய்யும் இடம் மற்றும் கொண்டு செல்லும் இடத்தை ஒருங்கிணைப்பதில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பல தரப்பினருடன் ஆலோசித்து போக்குவரத்து திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

ஆக்ஸிஜன் டேங்கர்கள் கிடைப்பதை அதிகரித்தல் - மாற்றுதல் & டேங்கர்களை இறக்குமதி செய்தல்

ஆக்ஸிஜன் டேங்கர்கள் கிடைப்பதை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நைட்ரஜன் மற்றும் அர்கான் டேங்கர்களை மாற்றுவதன் மூலமும், இறக்குமதிகள் மூலமும் ஆக்ஸிஜன் டேங்கர்கள் கிடைப்பது மேம்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், டேங்கர்களின் கொள்ளளவு 12,480 மெட்ரிக் டன்னாகவும், அவற்றின் எண்ணிக்கை 1040 ஆகவும் இருந்தன. தற்போது டேங்கர்களின் கொள்ளளவு 23,056 மெட்ரிக் டன்னாகவும், டேங்கர்களின் எண்ணிக்கை 1681 ஆகவும் அதிகரித்துள்ளது. இவற்றில் 408 டேங்கர்கள் மாற்றம் செய்யப்பட்டவை, 101 டேங்கர்கள் இறக்குமதி செய்யப்பட்டவை. 1,105 நைட்ரஜன் மற்றும் அர்கான் டேங்கர்களில் இதுவரை 408, டேங்கர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 200 டேங்கர்கள் விரைவில் மாற்றம் செய்யப்படும். 248 ஆக்ஸிஜன் டேங்கர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றில் இதுவரை 101 டேங்கர்கள் வந்துள்ளன. 58 டேங்கர்கள் அடுத்த 10 நாட்களில் இறக்குமதி செய்யப்படும்.  மேலும், 100 டேங்கர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

நேர விரயத்தை குறைப்பதற்காக ரயில் மற்றும் விமானம் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. நீண்ட தூரம் கொண்டு செல்லப்பட வேண்டிய டேங்கர்களுக்காக ரயில்வே பயன்படுத்தப்படுகிறது. இதுவரை, சுமார் 4,200 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 268-க்கும் அதிகமான டேங்கர்களில் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்வே எடுத்துச் சென்றுள்ளது. 68 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணத்தை ஏற்கனவே பூர்த்தி செய்துள்ளன. மே 9 அன்று மாலை நிலவரப்படி, 293 மெட்ரிக் டன் மகாராஷ்டிராவிலும், 1230 மெட்ரிக் டன் உத்தரப் பிரதேசத்திலும், 271 மெட்ரிக் டன் மத்தியப் பிரதேசத்திலும், 555 மெட்ரிக் டன் ஹரியானாவிலும், 123 மெட்ரிக் டன் தெலங்கானாவிலும், 1,679 மெட்ரிக் டன் தில்லியிலும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

  •  

நேரம் வீணாவதைத் தடுப்பதற்காக காலியான டேங்கர்கள் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. திரவ மருத்துவ ஆக்சிஜனை உள்நாட்டில் உள்ள அனைத்து வழிகளிலும் கொண்டு செல்லும் வகையில், 5505 மெட்ரிக் டன் 282 டேங்கர்களில் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை மூலமாக வெளிநாடுகளில் இருந்து 1293 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கூடிய 75 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1252 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மூன்று ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இந்திய விமானப் படை மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

  •  

ஆக்ஸிஜன் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு

  •  

நாட்டில் ஆக்ஸிஜனின் போக்குவரத்தை உடனுக்குடன் கண்காணிக்கும் விதமாக இணையம் மற்றும் செயலி சார்ந்த ஆக்ஸிஜன் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் சிறப்பாகவும், உடனடியாகவும் நடைபெறுவதால் ஆலைகளுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு உத்தரவுகள், ஆலைகளில் இருந்து அனுப்பப்படும் ஆக்சிஜன் அளவு, மற்றும் மாநிலங்களுக்கு அவை சென்று சேரும் வரையிலான உடனடி கண்காணிப்பு ஆகியவை திறம்பட நடக்கின்றன.

  •  

மின்னணு வழி அடிப்படையிலான தரவு பதிவேற்றத்திற்காக ஜிஎஸ்டிஎன் தரவு தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த முறையில், ஜிபிஎஸ், சிம் (ஓட்டுனரின் கைபேசி எண்) மூலம் டேங்கர்களின் கண்காணிப்பு, பாஸ்ட் டேக், பாதை மாறி சென்றாலோ, தேவையற்ற இடத்தில் நிறுத்தினாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ தானியங்கி அவசர தகவல்கள் ஆகிய வசதிகள் உள்ளன.

  •  

இவற்றைத் தவிர, சுகாதாரம், சாலை போக்குவரத்து, ரயில்வே, தொழில், எஃகு ஆகிய துறைகள்  மற்றும் மாநில அரசுகளின் கூடுதல்/இணைச் செயலாளர் அளவிலான அதிகாரிகளை கொண்ட மெய்நிகர் மத்திய கட்டுப்பாட்டு அறை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

  •  

வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் ஆக்சிஜன் போக்குவரத்தை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை, ஆக்சிஜன் போக்குவரத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை உடனடியாக தீர்க்கிறது.

  •  

ஆக்சிஜன் டேங்கர்களை ஓட்டுவதற்காக ஓட்டுநர்களுக்கு பயிற்சி

  •  

தேசிய