ரெயில்வே அமைச்சகம்

ஒரே நாளில் 831 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவைக் கொண்டு சென்று ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சாதனை

Posted On: 10 MAY 2021 5:08PM by PIB Chennai

பல்வேறு தடைகளையும் தாண்டி நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய ரயில்வே தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய ரயில்வே இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 295 டேங்கர்களில் சுமார் 4,700 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை விநியோகித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வாயிலாக 831 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

இதுவரை 75 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ளன.

இதுவரை மகாராஷ்டிராவிற்கு 293 மெட்ரிக் டன்னும், உத்தரப் பிரதேசத்திற்கு 1334 மெட்ரிக் டன்னும், மத்தியப் பிரதேசத்திற்கு 306 மெட்ரிக் டன்னும், ஹரியானாவிற்கு 598 மெட்ரிக் டன்னும்தெலங்கானாவிற்கு 123 மெட்ரிக் டன்னும், ராஜஸ்தானிற்கு 40 மெட்ரிக் டன்னும், தில்லிக்கு 2011 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரிலிருந்து கர்நாடகாவிற்கு முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் மேற்கொண்டு, பெங்களூருவிற்கு 120 மெட்ரிக் டன் பிராணவாயுவை கொண்டு செல்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717449

-----



(Release ID: 1717499) Visitor Counter : 200