வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சர்வதேச வர்த்தக பிரச்னைகளை தீர்க்க கொவிட்-19 உதவி மையம்: வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் நடவடிக்கை

Posted On: 10 MAY 2021 3:22PM by PIB Chennai

கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதை முன்னிட்டு, கொவிட்-19 உதவி மையத்தை கடந்த மாதம் 26ம் தேதி முதல் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் செயல்படுத்தி வருகிறது.

இது ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கிறது. இதன் மூலம் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சந்திக்கும் பிரச்சனைகள் ஆய்வு செய்யப்பட்டு விரைவாக தீர்க்கப்படுகின்றன.

உதவி  மையம் மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட முக்கிய பிரிவுகள்:

 *இறக்குமதி செய்யப்படும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்/ ஆக்ஸிமீட்டர்கள்/கொவிட் தொடர்பான மருத்துவ சாதனங்கள் - ஒழுங்கு முறைகள் மற்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட தளர்வுகள்;

* உரிமங்கள், ஊக்கத்தொகைகள்

விண்ணப்ப நிலவரம்:

* வங்கி தொடர்பான பிரச்சனைகள் - ரிசர்வ் வங்கியின் இடிபிஎம்எஸ் முறையில் இடம் பெறாத போக்குவரத்து ரசீதுகள்

* சுங்கத்துறை அனுமதி தொடர்பான விஷயங்கள்

* ஆவண சிக்கல்கள்

* ஏற்றுமதி தொடர்பான வேண்டுகோள்கள் நீட்டிப்பு

*போக்குவரத்து/துறைமுகம் கையாளுதல் /கப்பலில் அனுப்புதல்/ விமான இயக்கம்

உதவி, கொள்கை விளக்கம் மற்றும் தளர்வுகள் தொடர்பாக கடந்த 15 நாட்களுக்குள், 163 கோரிக்கைகள் பெறப்பட்டு, இவற்றில் 78  முற்றிலும் தீர்க்கப்பட்டன. இந்த தொற்று காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்க்கப்பட்ட முக்கிய பிரச்னைகள்:

தொழில் துறையினர் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண கொவிட்-19 உதவி மையத்தை நாடலாம். வெளிநாட்டு வர்த்தகம்  தலைமை இயக்குனரகத்தின் இணையதளத்தில்  (https://dgft.gov.in) தங்கள் பிரச்னைகளை பதிவு செய்யலாம் அல்லது dgftedi[at]nic[dot]in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். பெறப்படும் புகார்களை, இதர அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் மாநில அரசுகள்/ யூனியன் பிரதேச அரசுகளுடன்  முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்க வர்த்தகத்துறை உறுதியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717428

-----



(Release ID: 1717446) Visitor Counter : 199