தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

கொவிட் சம்பந்தமான அவசரகால சரக்குகளுக்கு துரிதமாக அனுமதி வழங்குவது தொடர்பாக அஞ்சல் துறை பொது அறிவிப்பு வெளியீடு

Posted On: 07 MAY 2021 3:52PM by PIB Chennai

கொவிட்- 19 பாதிப்பின் இரண்டாவது அலையின் போது, சுங்க அதிகாரிகளுடன் இணைந்து அஞ்சல் வழியாக வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பிராணவாயு செறிவூட்டி, உபகரணங்கள், மருந்துகள் போன்ற கொவிட் சம்பந்தமான அவசர சரக்குகளுக்கு அனுமதி அளித்து, அஞ்சல் துறை அவற்றை விநியோகித்து வருகின்றது. இது சம்பந்தமாக தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறை, பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வருங்காலங்களில் இதுபோன்ற அவசரகால சரக்குகளுக்கு அனுமதி அளிக்கவும், விரைவாக அவற்றை வழங்குவதற்காவும், சரக்குகளை எதிர்நோக்கியுள்ள மக்கள், தங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ள பொருள்கள் குறித்தத் தகவல்களை (பெயர், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, சரக்கைக் கண்காணிக்கும் முகவரி, சரக்கு அனுப்பப்பட்ட நாள் மற்றும் ஒப்படைக்கப்பட வேண்டிய முகவரி) adgim2@indiapost.gov.in  அல்லது dop.covid19@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கோ அல்லது கீழ்க்காணும் நோடல் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அஞ்சல் துறை தலைமையகத்தில் உள்ள நோடல் அதிகாரிகளின் விவரங்கள்

திரு அரவிந்த் குமார்- 9868378497

திரு புனீத் குமார்- 9536623331

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716798

*****************(Release ID: 1716844) Visitor Counter : 32