அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியா-இங்கிலாந்து மெய்நிகர் உச்சிமாநாடு: அறிவியல், தொழில்நுட்பம், புதுமையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

Posted On: 07 MAY 2021 10:19AM by PIB Chennai

இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சனும், இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே பொதுவான தொலைநோக்குடன் ஒரு புதிய, மாற்றம் வாய்ந்த விரிவான கேந்திர கூட்டணிக்கு ஒப்புதல் அளித்ததுடன் அடுத்த 10 ஆண்டுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உயர்ந்த லட்சியத்துடன் கூடிய 2030-ஆம் ஆண்டுக்கான இந்திய- இங்கிலாந்து திட்ட அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

2021 மே 4 அன்று இரண்டு தலைவர்களும் காணொலி வாயிலாக சந்தித்தபோது அறிவியல், கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகிய துறைகளில் கூட்டணியை மேம்படுத்துவதில் இரு தரப்பின் உறுதித்தன்மையை வலியுறுத்தியதோடு, அறிவியல் மற்றும் புதுமை மன்றத்தின் அடுத்த அலுவலகப் பணியை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தனர்.

தொலைத்தொடர்பு/ தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு துறையில் இங்கிலாந்து- இந்திய இடையே கையெழுத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கூட்டுப் பிரகடனம், தொழில்நுட்பம் மீது புதிய உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான உருவாக்கம், கொவிட்-19 சம்மந்தமான புதிய கூட்டு விரைவு ஆராய்ச்சி முதலீடு, விலங்குவழி தொற்று குறித்த ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கும் புதிய கூட்டணி, வானிலை மற்றும் பருவ நிலை அறிவியலின் புரிதலை மேம்படுத்துவதற்கான புதிய முதலீடு, இங்கிலாந்து- இந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்முயற்சியைத் தொடர்வது ஆகிய நடவடிக்கைகளை அவர்கள் வரவேற்றனர்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு இடையேஇங்கிலாந்தில்  உருவாக்கப்பட்டு', ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டு’, ‘உலகமெங்கும் விநியோகிக்கப்படும்கொவிட்-19 தடுப்பூசியின் மகத்தான வெற்றியைக் குறிப்பிட்டு, தற்போது நிலுவையில் உள்ள இங்கிலாந்து-இந்திய தடுப்பூசி கூட்டணியை நீட்டித்து, மேம்படுத்த இரு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர். சர்வதேச சமூகம் பாடம் கற்றுக்கொள்வதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தியதோடு, பெருந்தொற்றில் இருந்து வலிமையுடன் மீண்டு எழுவதற்கான உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்றியமைத்து, கூடுதல் வலு சேர்ப்பதற்கு இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716687

******

 

(Release ID: 1716687)



(Release ID: 1716745) Visitor Counter : 211