பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தற்காலிக ஓய்வூதியத்திற்கான விதிகள் தளர்த்தப்பட்டன என்றும், பெருந்தொற்றை கருத்தில் கொண்டு பயனாளிகளின் நலன் கருதி கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதென்றும் மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தகவல்

Posted On: 05 MAY 2021 4:11PM by PIB Chennai

பெருந்தொற்றை கருத்தில் கொண்டு தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவை ஓய்வு பெற்ற தினத்தில் இருந்து ஒரு வருடம் வரை நீட்டிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

ஒய்வூதிய துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் உடனான கூட்டத்தில் பேசிய அவர், தற்காலிக குடும்ப ஓய்வூதியத்திற்கான விதிகளும் தளர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தகுதியுடைய குடும்ப உறுப்பினரிடம் இருந்து குடும்ப ஓய்வூதியத்திற்கான கோரிக்கை மற்றும் இறப்பு சான்றிதழ் வந்தவுடன் குடும்ப ஓய்வூதியத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

பணியாற்றும் போது ஊனமுற்று அரசு சேவையில் தொடர்ந்தாலும், தேசிய ஓய்வூதிய திட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மொத்த நஷ்ட ஈட்டு பலனை வழங்குமாறும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஜிதேதிர சிங் கூறினார்.

கொவிட் காரணமாக ஓய்வூதியம் வழங்குவதில் கால விரயம் மற்றும் தாமதத்தை தவிர்ப்பதற்காக மின்னணு முறையை பயன்படுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை பயனாளியின் வீட்டிற்கே சென்று பெற்றுக் கொள்ள, 1,89,000 பணியாளர்க்ளை கொண்டுள்ள இந்திய தபால் மற்றும் கட்டண வங்கியின் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 1,48,325 மத்திய அரசு ஓய்வூதியர்கள் இந்த வசதியை இது வரை பயன்படுத்தியுள்ளனர்.

மேற்கண்ட பணிக்காக, நாட்டின் 100 முக்கிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று சேவைகளை வழங்கும் 12 பொதுத்துறை வங்கிகளையும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை ஈடுபடுத்தியுள்ளது.

*****************



(Release ID: 1716307) Visitor Counter : 212