மத்திய அமைச்சரவை

புலம் பெயர்தல், போக்குவரத்து தொடர்பான கூட்டுறவு: இந்தியா, இங்கிலாந்து வடக்குத் தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 05 MAY 2021 12:16PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, புலம் பெயர்தல் மற்றும் போக்குவரத்து கூட்டுறவு தொடர்பாக, இந்தியாவுக்கும், இங்கிலாந்து மற்றும் வடக்குத் தீவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

மாணவர்கள், ஆய்வாளர்கள், தொழில் வல்லுனர்கள் ஆகியோருக்கு விசா அளிப்பதில் தளர்வுத்தன்மைக்கும், சட்டத்திற்கு புறம்பான புலம் பெயர்தல், ஆட்களை கடத்துதல் தொடர்பான பிரச்சனைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இதனால் இந்திய மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், புலம் பெயரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் இன, மத, பால்பாகுபாடு இன்றி இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்குப் பங்காற்ற விரும்புவோர் உள்ளிட்ட அனைவரும் பயனடைவர்.

••••••


(Release ID: 1716093)


(रिलीज़ आईडी: 1716128) आगंतुक पटल : 323
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam