மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஐ.டி. ஹார்டுவேர் தயாரிக்க உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 19 நிறுவனங்கள் விண்ணப்பம்

Posted On: 04 MAY 2021 1:11PM by PIB Chennai

.டி ஹார்டு வேர் தயாரிப்புக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், 19 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இது குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 3ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது. இத்திட்டத்தின் கீழ் ஊக்குவிப்பு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பொருந்தும்

ஐடி ஹார்டுவேர் கம்பெனிகள் பிரிவின் கீழ் எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் உற்பத்தி நிறுவனங்களான டெல், ஐசிடி(விஸ்ட்ரான்), பிளக்ஸ்ட்ரானிக்ஸ், ரைசிங் ஸ்டார்ஸ் ஹைடெக்(ஃபாக்ஸ்கான்) மற்றும் லாவா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

டிக்சன், இன்போபவர், பகவதி(மைக்ரோமேக்ஸ்), சிர்மா, ஆர்பிக், நியோலிங்க், ஆப்டிமஸ், நெட்வெப், விவிடிஎன், ஸ்மைல் எலக்ட்ரானிக்ஸ், பனாச்சே டிஜிலைப், எச்எல்பிஎஸ், ஆர்டிபி வொர்க் ஸ்டேஷன்ஸ் மற்றும் கோகோனிக்ஸ் போன்ற 14 நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ளன

இந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செயல்பாட்டை விரிவாக்கி, .டி ஹார்டுவேர் உற்பத்தியில் தேசிய சாம்பியன் நிறுவனங்களாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு  திட்டம்,   தகுதிவாய்ந்த நிறுவனங்கள் இந்தியாவில்  உற்பத்தி செய்யும் இலக்கு பிரிவுகளின் கீழ், பொருட்களின் நிகர  விற்பனையில் (2019-20 நிதியாண்டின் அடிப்படை ஆண்டுக்கு மேல்) 4% முதல் 2% / 1% வரை ஊக்கத்தொகையை நான்கு வருட காலத்திற்கு நீட்டிக்கிறது ( 2021-22 முதல்  2024-25 வரை).

இது குறித்து மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘ ஐடி ஹார்டுவேருக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்துக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதால்இத்திட்டம்  மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது

ஐடி தொழில்துறை இந்தியாவின் முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. இது தற்சார்பு இந்தியாவுக்கு பிரதமர் விடுத்த அழைப்பை எதிரொலிக்கிறது. இதன் மூலம் நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சூழல் வலுவடையும்’’ என்றார்

அடுத்த 4 ஆண்டுகளுக்கு இத்திட்டம் ரூ.1,60,000 கோடி மதிப்பிலான உற்பத்திக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த உற்பத்தியில், ஐடி ஹார்டுவேர் நிறுவனங்கள் ரூ.1,35,000 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யும் என தெரிவித்துள்ளன. உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.25,000 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யும் என தெரிவித்துள்ளன.

இத்திட்டம் ஏற்றுமதியை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுஅடுத்த 4 ஆண்டுகளில் ரூ.1,60,000 கோடி மதிப்பிலான மொத்த உற்பத்தியில், 37 சதவீதத்துக்கு மேல், அதாவது ரூ.60,000 கோடி ஏற்றுமதியால் கிடைக்கும்

இத்திட்டம் மின்னுவியல் உற்பத்தியில் ரூ.2,350 கோடி அளவுக்கு கூடுதல் முதலீட்டை கொண்டு வரும். இத்திட்டம் அடுத்த 4 ஆண்டுகளில் தோராயமாக 37,500 நேரடி வேலை வாய்ப்பையும், இதை விட 3 மடங்கு அளவில் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715871

****


(Release ID: 1715913) Visitor Counter : 298