சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 16.54 கோடி கொவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது மத்திய அரசு
Posted On:
02 MAY 2021 11:38AM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து “அரசின் முழுமையான அணுகுமுறையுடன்” இந்திய அரசு தீவிரமாகப் போராடி வருகிறது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் ஐந்து அம்ச உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை ஆகியவற்றுடன் தடுப்பூசி, மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது.
கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் மூன்றாவது கட்டம் நேற்று (2021, மே 1) தொடங்கியது.
இந்திய அரசு இதுவரை சுமார் 16.54 கோடி (16,54,93,410) தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் வீணானவை உட்பட மொத்தம் 15,76,32,631 டோஸ்கள் (இன்று காலை 8 மணிக்குக் கிடைத்தத் தரவின் படி) போடப்பட்டுள்ளன.
78 லட்சத்திற்கும் அதிகமான (78,60,779) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளன.
கூடுதலாக சுமார் 56 லட்சம் டோஸ்கள் (56,20,670), அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715481
----
(Release ID: 1715506)