பாதுகாப்பு அமைச்சகம்
கொவிட்-19 பரவலுக்கு எதிரான போரில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கன்டோன்மென்ட் வாரியங்கள் உதவுகின்றன
प्रविष्टि तिथि:
30 APR 2021 4:27PM by PIB Chennai
தற்போதைய கொவிட்-19 சூழ்நிலையிலிருந்து மீண்டு வருவதற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு கன்டோன்மென்ட் வாரியங்கள் உதவி கரத்தை நீட்டி உள்ளன.
கன்டோன்மென்ட் பகுதிகளில் குடியிருப்போருக்கு மட்டுமில்லாமல், மருத்துவ உதவி தேவைப்படும் அனைவருக்கும் உதவி வழங்கப்படுகிறது.
தற்சமயம், 1,240 படுக்கைகளுடன் கூடிய 40 பொது மருத்துவமனைகளை கன்டோன்மென்ட் வாரியங்கள் பராமரித்து வருகின்றன. புனே, கிர்கீ மற்றும் தியோலலியில் உள்ள 304 படுக்கைகளுடன் கூடிய கன்டோன்மென்ட் வாரிய மருத்துவமனைகள் பிரத்தியேக கொவிட் மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கிர்கீ, தியோலலி, தேகுரோட், ஜான்சி மற்றும் அகமது நகரில் உள்ள 418 படுக்கைகளுடன் கூடிய கன்டோன்மென்ட் பொது மருத்துவமனைகள் கொவிட் மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து 39 கன்டோன்மென்ட் பொது மருத்துவமனைகளில் காய்ச்சல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கொவிட் அருகில் உள்ள நோயாளிகள் பிரத்தியேக கொவிட் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து துரித ஆன்டிஜன் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பெரும்பாலான கன்டோன்மென்ட்டுகளில் தடுப்பு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்ததை தொடர்ந்து, ஏப்ரல் 20 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆய்வுக் கூட்டங்களை நடத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தற்போதைய நிலைமையை எதிர்கொள்வதற்காக இயன்ற அனைத்து உதவிகளையும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செய்யுமாறு பாதுகாப்பு படைகளை அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715082
------
(रिलीज़ आईडी: 1715165)
आगंतुक पटल : 242