ரெயில்வே அமைச்சகம்
மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தில்லிக்கு 510 மெட்ரிக் டன் பிராணவாயுவை விநியோகித்தன, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
Posted On:
28 APR 2021 4:00PM by PIB Chennai
நாட்டின் பல்வேறு பகுதிகளில் திரவ மருத்துவ பிராணவாயுவை கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய ரயில்வே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களுக்கு 510 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருத்துவ பிராணவாயுவை ரயில்வே விநியோகித்துள்ளது.
ஹரியானா அரசும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையைக் கோரியுள்ளது. ஹரியானாவிற்கு பிரத்தியேகமாக தலா 5 டேங்கர்கள் வீதம் இரண்டு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவுடன் முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை மத்தியப் பிரதேசம் சென்றடைந்தது.
4-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 3 டேங்கர்களுடன் இன்று லக்னோ சென்றடையும். லக்னோவிலிருந்து பொகாரோவிற்கு காலி கொள்கலன்களுடன் சென்றுள்ள மற்றொரு ரயில், உத்திரப் பிரதேசத்திற்குத் தேவையான கூடுதல் பிராணவாயுவுடன் திரும்பும். இதன்மூலம் உத்திரப் பிரதேசத்திற்கு தங்குதடையற்ற பிராணவாயு விநியோகம் கிடைக்கும்.
இதுவரை இந்திய ரயில்வே 202 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை உத்திரப் பிரதேசத்திற்கும், 174 மெட்ரிக் டன்னை மகாராஷ்டிராவிற்கும், 70 மெட்ரிக் டன்னை தில்லிக்கும், 64 மெட்ரிக் டன்னை மத்தியப் பிரதேசத்திற்கும் கொண்டு சேர்த்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714620
*****************
(Release ID: 1714693)
Visitor Counter : 254