மத்திய அமைச்சரவை
சுங்க ஒத்துழைப்பு மற்றும் சுங்கத்துறை விஷயங்களில் பரஸ்பர நிர்வாக உதவி: இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையேயான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 APR 2021 11:56AM by PIB Chennai
சுங்க ஒத்துழைப்பு மற்றும் சுங்கத்துறை விஷயங்களில் பரஸ்பர நிர்வாக உதவியை மேற்கொள்ள இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்பந்தத்தால் ஏற்படும் நன்மை:
சுங்க குற்றங்கள் தடுப்பு மற்றும் விசாரணைக்கும், நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் வர்த்தக பொருட்களுக்கான அனுமதியை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திகள் அமலாக்கம் மற்றும் இலக்குகள்:
அந்தந்த நாடுகள் அனுமதி அளித்த பிறகு, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் அரசுகளின் சார்பில் கையெழுத்திடப்படும். இரு நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் கையெழுத்திட்ட பின்பு வரும் மாதத்தின் முதல் தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்.
பின்னணி:
இந்த ஒப்பந்தம் இருநாடுகளின் சுங்க அதிகாரிகள் இடையே தகவல்களையும், உளவுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள சட்ட விதிமுறையை வழங்கும். சுங்க விதிகளை முறையாக அமல்படுத்தி, சுங்க குற்றங்களைத் தடுக்கவும் விசாரிக்கவும் உதவும். மேலும், சட்ட ரீதியான வர்த்தகத்துக்கும் இது உதவும். இந்த ஒப்பந்தத்தின் வரைவு, இரு நாட்டு சுங்க நிர்வாகத்தின் ஒப்புதலுடன் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய சுங்கத்துறையின் கவலைகள் மற்றும் தேவைகளை தீர்ப்பதாக இந்த ஒப்பந்தம் உள்ளது. குறிப்பாக சுங்க மதிப்பை சரிசெய்வது பற்றிய தகவல்கள், கட்டண வகைப்பாடுகள் மற்றும் இரு நாடுகள் இடையேயான சரக்குகள் எங்கிருந்து வருகின்றன என்ற தகவல்களை பகிர்ந்து கொள்ள இது உதவும்.
******
(Release ID: 1714522)
(வெளியீட்டு அடையாள எண்: 1714550)
வருகையாளர் எண்ணிக்கை : 319
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam