சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் நிலவும் பிராணவாயு டேங்கர்களின் பற்றாக்குறையை சரி செய்ய, 20 கிரையோஜெனிக் டேங்கர்களை இறக்குமதி செய்தது மத்திய அரசு

Posted On: 27 APR 2021 11:05AM by PIB Chennai

நாட்டில் ஏற்பட்டுள்ள பிராணவாயு டேங்கர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக, 10 மெட்ரிக் டன் மற்றும் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 கிரையோஜெனிக் டேங்கர்களை மத்திய அரசு இறக்குமதி செய்து, மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது. உற்பத்தி ஆலைகளில் இருந்து திரவ மருத்துவ பிராணவாயுவை பல்வேறு மாநிலங்களுக்கு கிரையோஜெனிக் டேங்கர்கள் வாயிலாக கொண்டு செல்வதும், நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்து இதர பகுதிகளுக்கு அவற்றை எடுத்துச் செல்வதும் சவாலாக இருப்பதால் பிராணவாயுவின் போக்குவரத்தை விரைவுபடுத்தும் நோக்கத்தில் 20 கிரையோஜெனிக் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதிகாரமளிக்கப்பட்ட குழு-2-இன் வழிகாட்டுதலின்படி தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் ஆலோசனையின் பேரில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்த கொள்கலன்களை மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது.

 

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும்  திட்டத்தில்  இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 14.5 கோடியை இன்று கடந்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 20,74,721 முகாம்களில்‌ 14,52,71,186 பயனாளிகளுக்கு, கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 31 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

101-வது நாளான நேற்று (ஏப்ரல் 26, 2021), நாடு முழுவதும் 31,74,688 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,45,56,209 ஆக (82.54%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,51,827 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில்  மட்டும் 71.68 விழுக்காடு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 48,700 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 33,551 பேரும், கர்நாடகாவில் 29,744 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 28 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்போது 28,82,204 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 16.34 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,771 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.12 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714280

-----


(Release ID: 1714350) Visitor Counter : 258