எஃகுத்துறை அமைச்சகம்

3131 மெட்ரிக் டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சப்ளை செய்தன எஃகு நிறுவனங்கள்

Posted On: 26 APR 2021 4:41PM by PIB Chennai

பொதுத்துறை மற்றும் தனியார் எஃகு ஆலைகள், பல்வேறு மாநிலங்களுக்கு ஏப்ரல் 25ம் தேதி அன்று 3131.84 மெட்ரிக் டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்தன.

இதற்கு முந்தைய நாள், இந்த நிறுவனங்கள் 2894 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்தன. ஒரு வாரத்துக்கு முன்பு நாள் ஒன்றுக்கு சராசரியாக 1500/1700 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டன

ஏப்ரல் 25ம் தேதியன்று 3468.6 மெட்ரிக் டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டன.

பல ஆலைகளில் நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயுக்களின் உற்பத்தி குறைக்கப்பட்டு, திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்வதால், இவற்றின் விநியோகத்தை எஃகு ஆலைகளால் அதிகரிக்க முடிந்தது.

எஃகு ஆலைகளில் வழக்கமாக 3.5 நாட்களுக்கான, திரவ மருத்துவ ஆக்ஸிஜன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களில்  ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், இது பயன்படுத்தப்படும்தற்போது இந்த பாதுகாப்பு அளவு 3.5 நாட்களில் இருந்து 0.5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் அதிகரித்துள்ளது.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் போக்குவரத்தை விரைவுப் படுத்த, நைட்ரஜன் மற்றும் ஆர்கான் டேங்கர்களை ஆக்ஸிஜன் டேங்கர்களாக மாற்ற தொழில் வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது

தற்போது வரை, 765 நைட்ரஜன் டேங்கர்கள், 8345 மெட்ரிக் டன்கள் கொள்ளவுடனும், 434 ஆர்கான் டேங்கர்கள் 7542 மெட்ரிக் டன்கள் கொள்ளவுடனும் உள்ளனஇவற்றின் ஒரு பகுதியை ஆக்ஸிஜன் கொண்டு செல்வதற்கு மாற்ற பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இது மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு செல்லும தாமதங்களை அகற்றும்தற்போது வரை 1172 டேங்கர்கள் 15,900 மெட்ரிக்  கொள்ளவுடன்  திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்துக்காக தயார் நிலையில் உள்ளன.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை 15 மெட்ரிக் டன்கள் அதிகரிப்பதற்காக, பிலாய் எஃகு ஆலை குறுகிய காலத்துக்கு எஃகு உற்பத்தியை நிறுத்தியுள்ளதுஇதேபோன்ற உத்தரவுகள், இதர பொதுத்துறை எஃகு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

-------


(Release ID: 1714173) Visitor Counter : 208