நிதி அமைச்சகம்

கொவிட் தொடர்பான சாதனங்களின் விரைவான இறக்குமதிக்கு பிரத்தியேக உதவி மையம்: மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தொடங்கியது

Posted On: 26 APR 2021 1:47PM by PIB Chennai

கொவிட் தொடர்பான இறக்குமதிகளுக்கு விரைவான சுங்க அனுமதி கிடைக்க பிரத்தியேக உதவி மையத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஏற்படுத்தியுள்ளது.   கொவிட் தொடர்பான இறக்குமதிகளுக்கு விரைவான சுங்க அனுமதி கிடைப்பதிலும்,  தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அப்போதுதான் அவை, பயனாளிகளுக்கு குறித்த நேரத்தில் கிடைக்கும்.

இவற்றுக்கு வரி விலக்கு, ஒப்புதல், பதிவு தொடர்பாக மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியத்திடம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.   இந்த நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக, பிரத்தியேக உதவி மையத்தை மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தகம் தொடர்பான ஒப்புதல்களை வழிநடத்த https://t.co/IAOQenWwO2) என்ற முகவரியில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் புகார்களைத் தெரிவித்து விரைவில் தீர்வு பெறலாம்பொதுவான விசாரணைக்கு, icegatehelpdesk@icegate.gov.in  என்ற முகவரியில் மின் அஞ்சல் அனுப்பலாம். அல்லது இலவச அழைப்பு எண்  1800-3010-1000- பயன்படுத்தலாம். இந்த உதவி மையத்தில் பெறப்படும் வேண்டுகோள்கள், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, விரைவில் தீர்வு காணப்படும்.

மேலும், உள்ளூர் அளவில் குறைகளைத் தீர்க்க, மண்டல அளவிலான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலை கீழ்க்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.  (https://www.cbic.gov.in/resources//htdocs-cbec/CBIC%20Nodal%20Officers%20for%20Covid%2019%20Revised.pdf).

சுங்கத்துறை இணை செயலாளர் திரு கவுரவ் மசால்தன்மத்திய முறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக இருப்பர்இவர் குறைகளுக்கு தீர்வு கண்டு, கொவிட் தொடர்பான  சாதனங்களின் விரைவான அனுமதிக்கு ஒப்புதல் அளிப்பார்.

புகார்களுக்கு உதவி மையம் மற்றும் மண்டல அதிகாரிகள்  மூலம் தீர்வு காணப்படவில்லை என்றால், சிறப்பு அதிகாரிக்கு 9810619628 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அல்லது  வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம். அல்லது  masaldan.gaurav[at]nic[dot]in என்ற -மெயில் முகவரியிலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.

-----


(Release ID: 1714115) Visitor Counter : 219