பாதுகாப்பு அமைச்சகம்
ஏர் வைஷ் மார்ஷல் அசுதோஷ் சர்மா வெளியிட்டதாக கூறப்படும் வாட்ஸ் அப் தகவல் பற்றிய விளக்கம்
प्रविष्टि तिथि:
25 APR 2021 12:51PM by PIB Chennai
கொவிட்-19 தொற்றை போக்க நீராவியை பயன்படுத்தலாம் என பெங்களூரில் விமானப்படை மருத்துவமனையின் ஏர் மார்ஷல் அசுதோஸ் சர்மா தெரிவித்துள்ளதாக கூறப்படும் ஒரு தகவல் வாட்ஸ் அப் தளத்தில் வலம் வருகிறது.
பெங்களூரில் ஏர் மார்ஷல் அசுதோஸ் சர்மா என எவரும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப் படுகிறது. பெங்களூரில் உள்ள விமானப்படை மருத்துவமனை, ஏர் வைஸ் மார்ஷல் அசுதோஸ் சர்மா என்பவர் தலைமையில் செயல்படுகிறது மற்றும் கேள்வி குறியான அந்த தகவல் அவரால் வெளியிடப்படவில்லை.
அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயம் சம்பந்தமாக விமானப்படை மற்றும் ஏர் வைஸ் மார்சல் அசுதோஷ் சர்மா ஆகியோர் எந்த உறுதியும் அளிக்கவில்லை. யாருக்காவது கொவிட்-19 அறிகுறி இருந்தால், அவர்கள் முறைப்படி சிகிச்சைக்கு மருத்துவ ரீதியான ஆலோசனையைப் பெற வேண்டும்.
------
(रिलीज़ आईडी: 1713954)
आगंतुक पटल : 274