பிரதமர் அலுவலகம்
விரார் மருத்துவமனை தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல், நிவாரண உதவிக்கு ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
23 APR 2021 9:46AM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, விராரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் விராரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1713505)
வருகையாளர் எண்ணிக்கை : 274
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam