பிரதமர் அலுவலகம்

திரு ஷங்கா கோஷ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 21 APR 2021 3:16PM by PIB Chennai

பிரபல இலக்கியவாதி திரு ஷங்கா கோஷ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ வங்கமொழி மற்றும் இந்திய இலக்கியத்தில் ஆற்றிய பங்களிப்புக்காக திரு ஷங்கா கோஷ் நினைவு கூறப்படுவார். அவர் எழுதியவை அதிகம் படிக்கப்பட்டு பாராட்டப்பட்டவை. அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்கள் . ஓம் சாந்தி’’ என குறிப்பிட்டுள்ளார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1713265) வருகையாளர் எண்ணிக்கை : 194