பாதுகாப்பு அமைச்சகம்

விமானப்படை தளபதி பிரான்ஸ் பயணம்

Posted On: 19 APR 2021 10:05AM by PIB Chennai

விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா, அரசு முறைப் பயணமாக இன்று பிரான்ஸ் சென்றார். இவரின் ஐந்து நாள் பயணம், இருநாட்டு  விமானப்படைகளின்  உறவை பலப்படுத்தும்அதிகரிக்கும்.

பிரான்ஸ் விமானப்படை தளபதி ஜெனரல் பிலிப் லெவிக்னே, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார். அதையடுத்து, இந்திய விமானப்படை தளபதி தற்போது பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பிரான்ஸ் நாட்டின் விமானப்படை தளங்களில், அந்நாட்டு விமானப்படை உயர் அதிகாரிகளுடன், இந்திய விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

இந்திய விமானப்படையும், பிரான்ஸ் விமானப்படையும், சமீபத்தில்  கருடா, ஹாப் என்ற பயிற்சிகளில் ஈடுபட்டனகடைசியாக  ‘எக்ஸ் டெசர்ட் நைட் 21’ என்ற பயிற்சி ஜோத்பூர் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்ததுஐக்கிய அரபு அமீரக விமானப்படை, பல்வேறு  நட்பு நாடுகளிடன் கடந்த மாதம் நடத்தியஎக்ஸ் டெசர்ட் பிளாக்கூட்டுப் பயிற்சியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு விமானப்படைகள் பங்கேற்றன.

இருநாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதில், இந்திய விமானப்படை தளபதியின் பயணம், முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712604

*****

(Release ID: 1712604)



(Release ID: 1712640) Visitor Counter : 183