சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

தீர்ப்புகள் & உத்தரவுகள் இணையதளம் மற்றும் மின்னணு தாக்கல் 3.0 பிரிவை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 12 APR 2021 3:50PM by PIB Chennai

கடந்தகால தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை தேடுவதற்கான இணையதளம் மற்றும் நீதிமன்ற ஆவணங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான மின்-தாக்கல் பிரிவு ஆகியவற்றை உச்ச நீதிமன்ற நீதிபதியும், உச்ச நீதிமன்ற மின்-குழுவின் தலைவருமான, மருத்துவர் மற்றும் நீதிபதி தனஞ்சய ஒய் சந்திரசூட் காணொலி மூலம் வெள்ளியன்று திறந்து வைத்தார்.

நீதித் துறை செயலாளர் திரு பருன் மித்ரா, பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், தேசிய தகவல் மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் நீத்தா வர்மா, உச்ச நீதிமன்ற மின்னணுக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் காணொலி மூலம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

38 மில்லியன் வழக்குகளின் தகவல்கள், கடந்தகால தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை தேடுவதற்கான வசதி இந்த இணையதளத்தில் கிடைக்குமென்று நீதிபதி சந்திரசூட் தம்முடைய உரையில் குறிப்பிட்டார்.

“106 மில்லியன் வழக்குகள் மற்றும் 141 உத்தரவுகளின் தரவுகள் நம்மிடம் உள்ளன. இவ்வளவு அதிகமான தரவுகளை வைத்துக்கொண்டு, நாம் ஏன் ஒரு இலவச தேடும் இயந்திரத்தை வழங்கக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.

மின்னணு தாக்கல் 3.0 வசதி பற்றி குறிப்பிட்ட நீதிபதி சந்திரசூட், “இதன் மூலம் வழக்கு தொடுப்பவர் மற்றும் வழக்கறிஞர்கள் எங்கும் பயணிக்காமல் தங்களது இடங்களில் இருந்தவாறே பணிகளை மேற்கொள்ளலாம். வெறும் ஆறு மாதங்களில் இந்த அமைப்புக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன,” என்றார்.

மேலும் பேசிய அவர், “உதாரணமாக, ஆக்ராவில் இருக்கும் ஒரு வங்கி மேலாளர், லக்னோவில் இருக்கும் வழக்கறிஞர் ஒருவர் மற்றும் கோரக்பூரில் பதிவு செய்யப்பட வேண்டிய வழக்கு ஆகிய மூன்றும்  மின்னணு தாக்கல் 3.0 மூலம் ஒன்றிணைந்து  நீதிமன்றத்திற்கு நேரில் வராமலேயே ஆவணங்களை தாக்கல் செய்யலாம் ,” என்றும் நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711151

*****************


(रिलीज़ आईडी: 1711189) आगंतुक पटल : 2844
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Kannada , Malayalam