பிரதமர் அலுவலகம்
இந்திய-நெதர்லாந்து காணொலி உச்சி மாநாடு (2021 ஏப்ரல் 09)
Posted On:
08 APR 2021 7:09PM by PIB Chennai
நெதர்லாந்து பிரதமர் திரு மார்க் ருட்டேவுடன் காணொலி உச்சி மாநாட்டை 2021 ஏப்ரல் 9 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்துகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் திரு ருட்டே பெற்ற வெற்றியை தொடர்ந்து நடைபெறும் இந்த உச்சி மாநாடு, தொடர் உயர்மட்ட உரையாடல்கள் மூலமாக கட்டமைக்கப்பட்ட இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்லும்.
இந்த உச்சி மாநாட்டின் போது, இருதரப்பு நல்லுறவு குறித்து விவாதிக்க இருக்கும் இரு தலைவர்களும், உறவை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து ஆலோசிப்பார்கள்.
பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை அவர்கள் பரிமாறிக் கொள்வார்கள்.
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரம் ஆகிய மாண்புகளை இந்தியா மற்றும் நெதர்லாந்துக்கு இடையே உள்ள நட்புறவு பகிர்ந்து கொள்கிறது.
ஐரோப்பிய கண்டத்தில் இந்தியர்கள் அதிகளவில் வாழும் நாடு நெதெர்லாந்து ஆகும். நீர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், சுகாதாரம், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகர்ப்புற போக்குவரத்து, அறிவியல் & தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் விரிவான நல்லுறவை இரு நாடுகளும் வைத்துள்ளன.
இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் மூன்றாவது பெரிய தேசமாக நெதர்லாந்து உள்ளதால், இரு நாடுகளும் துடிப்பான பொருளாதார மேம்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன.
200 நெதர்லாந்து நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. இதே அளவிலான இந்திய நிறுவனங்கள் நெதர்லாந்திலும் செயல்படுகின்றன.
*****************
(Release ID: 1710504)
Visitor Counter : 203
Read this release in:
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam