பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் எம் எம் நரவனே வங்கதேசம் புறப்பட்டு சென்றார்

Posted On: 08 APR 2021 10:10AM by PIB Chennai

இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே நிலவும் வலுவான இருதரப்பு மற்றும் ராணுவ உறவுகளின் சிறப்பான பாரம்பரியத்தை தொடரும் விதமாக, 2021 ஏப்ரல் 8 முதல் 12 வரையிலான வங்கதேச பயணத்திற்காக பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி புறப்பட்டுச் சென்றார்.

வங்கதேசம் தனது 50-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் சமயத்தில் ஜெனரல்  நரவனேவின் பயணம் அமைந்துள்ளது. சுதந்திரப் போரின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த உள்ள ஜெனரல் நரவனே, வங்கதேசத்தின் முப்படைத் தளபதிகளை தனித் தனியாக சந்திக்க உள்ளார்.

வங்கதேசத்தின் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவிட அருங்காட்சியகத்தை யும் ஜெனரல் நரவனே பார்வையிட உள்ளார்.

2021 ஏப்ரல் 11 அன்று வங்கதேச வெளியுறவு  அமைச்சருடன் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி உரையாட உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி மற்றும் ஆதரவு செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கு ஒன்றிலும் கலந்து கொள்ளவிருக்கும் அவர்,  'மாறிவரும் உலக பிரச்சனைகள்: ஐநா அமைதிக் காப்பாளர்களின் பங்கு' எனும் தலைப்பில் அங்கு சிறப்புரை ஆற்றவுள்ளார்.

மாலி, தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகள் குழுக்களின் தளபதிகளோடு உரையாடவுள்ள ஜெனரல் எம் எம் நரவனே, பூட்டான் ராணுவத்தின் துணைத் தலைமை செயல்பாடுகள் அதிகாரியுடனும் 2021 ஏப்ரல் 12 அன்று கலந்துரையாடவுள்ளார்.

மேலும் பல உரையாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1710324

*****************


(Release ID: 1710481) Visitor Counter : 244